ஐம்பதாவது
சுந்தரப்பேரம்பெய்த படலம்
|
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
அங்கண ருரக
மணிந்தருள் வடிவ மடைந்தர சகமகிழக்
கங்கண விடவர வங்கொடு கடிநகர் கண்டருண் முறையிதுவாஞ்
சங்கணி குழையினர் பஞ்சவன் வழிபடு தம்பெய ரெழுதியகூர்
வெங்கணை கொடுவள வன்படை முடுகிய வென்றியை
யினிமொழிவாம். |
(இ
- ள்.) அங்கணர் - அருட்பார்வையையுடைய இறைவர், உரகம்
அணிந்தருள் வடிவம் அடைந்து - பாம்பினை அணிந்தருளிய சித்த
மூர்த்திகள் வடிவம் கொண்டருளி, அரசு அகம் மகிழ - வங்கிய
சேகரமன்னன் உள்ளமகிழ, கங்கண விட அரவம்கொடு - கங்கணமாகிய
நஞ்சினையுடைய பாம்பினால், கடிநகர் கண்டருள் முறை இதுவாம் -
காவலையுடைய நகரின் எல்லையை வரையறுத்துக் காட்டி யருளிய
திருவிளையாடல் இதுவாகும்; சங்கு அணி குழையினர் - அணிந்த சங்கி
னாலாகிய குழையையுடைய அவ்விறைவர், பஞ்சவன் வழிபடும் தம்பெயர்
எழுதிய - பாண்டியன் வழிபடுகின்ற தமது திருப்பெயர்தீட்டிய,
கூர்வெங்கணைகொடு - கூரிய கொடிய அம்புகளினால், வளவன்படை
முடுகிய வென்றியை - விக்கிரம சோழன் படையைத் துரத்திய
திருவிளையாடலை, இனிமொழிவாம் - இனிக்கூறுவாம்.
கொடு
- கொண்டு; மூன்றாம் வேற்றுமைச்சொல். தம் பெயர் -
சுந்தரன் என்னும் பெயர். முடுகிய - ஒட்டிய வென்னும் பொருட்டு. (1)
வெங்கய னீள்கொடி
வங்கிய சேகரன் வெண்குடை நீழலின்வாய்
வங்கமு லாவிய தெண்கடன் ஞால மடந்தையு மாசறுசீர்ச்
செங்கம லாலய மங்கையும் வாலிய திண்பது மாலயமேல்
நங்கையு மோவற மங்கல மான நயம்பெற* வாழ்வுறுநாள். |
(இ
- ள்.) வெங்கயல் நீள் கொடி வங்கிய சேகரன் - வெவ்விய
கயல் எழுதிய நீண்ட கொடியையுயர்த்திய வங்கிய சேகரபாண்டியனது,
வெண்குடைநீழலின் வாய் - வெண்கொற்றக்குடையின் நிழலின்கண், வங்கம்
உலாவிய தெண்கடல் ஞாலமடந்தையும் - மரக்கலங்கள் உலாவும்
தெளிந்தகடல் சூழ்ந்த நிலமகளும், மாசு அறுசீர்ச் செங்கமல ஆலய
மங்கையும் - குற்றமற்ற சிறப்பினையுடைய செந்தாமரை மலரைக் கோயிலாக
உடைய திருமகளும், வாலிய திண்பதும ஆலயமேல் நங்கையும் -
வெண்மையாகியதிண்ணிய தாமரை மலராகிய கோயிலின்கண் வீற்றிருக்கும்
நாமகளும், ஓவுஅற - நீங்குதலில்லாமல், மங்கலம் ஆனநயம் பெற -
(பா
- ம்.) * நயம்பெறு.
|