[அறுசீரடியாசிரிய
விருத்தம்] |
உலகினுட்
பெருகி யந்த வொண்டமிழ் மூன்றும் பாடற்
றிலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வநா வலருந் தங்கள்
கலகமா நவையிற் றீர்ந்து காசறு பனுவ லாய்ந்து
புலமிகு கோட்டி செய்து பொலிந்தன ரிருந்தார் போலும். |
(இ
- ள்.) அந்த ஒண்தமிழ் மூன்றும் - அவ்வணிக மைந்தனால்
முற்றும் பாராட்டப் பெற்ற நக்கீரன் கபிலன் பரணன் என்னும் மூவருடைய
பாடல்கள், உலகினுள் பெருகி - உலகத்திற் பரவி, பாடல் திலகமாய்ச் சிறந்த
- பாக்களுக்குத் திலகமாக விளங்கின; ஆய்ந்த தெய்வ நாவலரும் -
கலைகளை ஆராய்ந்த தெய்வப் புலவர்களும், தங்கள் கலகமாம் நவையில்
தீர்ந்து - தங்கள் கலகமாகிய குற்றத்தினின்றும் நீங்கி, காசு அறு பனுவல்
ஆய்ந்து - குற்றமற்ற நூல்களை ஆராய்ந்து, புலம் மிகு கோட்டி செய்து
பொலிந்தனர் இருந்தார் - அறிவான் மிக்க அளவளாவு தலைச் செய்து
விளங்கி இருந்தனர்.
சிறந்த,
அன்பெறாத பல வறிசொல். தெய்வ நாவலர் - தெய்வத்தன்மை
வாய்ந்த புலவர், கோட்டி செய்தல். கூடி அளவளாவுதல்; வாதஞ் செய்தல்.
பொலிந்தனர், முற்றெச்சம். போலும், ஒப்பில் போலி. (14)
ஆகச்செய்யுள்
- 2610
|