பக்கம் எண் :

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 139



ஐம்பத்தாறாவது
இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

       [அறுசீரடியாசிரிய விருத்தம்]
குடைக்காடன் பசிக்கன்னக் குழியருத்தி
     வேட்கையறக் கொடுத்த கங்கைச்
சடைக் காடன் புலவரிக றணிவித்த
     முறையிதுமேற் றன்னைப் பாடுந்
தொடைக்காடன் பகன்றிகழ்ந்த தென்னவனை
     முனிந்துதன்னைத் தொழுது போன
இடைக்காட னுடன்போய்ப்பின் பெழுந்தருளிப்
     பிணக்கறுத்த வியல்பு சொல்வாம்.

     (இ - ள்.) குடைக்கு ஆள்தன் பசிக்கு - குடை பிடிப்பதற்கு
ஆளாகிய குண்டோதரனது பசியை நீக்குதற்கு, அன்னக்குழி அருத்தி -
அன்னக்குழியை வருவித்து ஊட்டி, வேட்கை அறக்கொடுத்த கங்சைச்
சடைக்காடன் - அவன் நீர் வேட்கை நீங்கக் கொடுக்கப்பட்ட கங்கையை
அணிந்த சடைக் காட்டினையுடைய சோமசுந்தரக் கடவுள், புலவர் இகல்
தணிவித்த முறை இது - புலவர்களின் கலகத்தைத் தீர்த்தருளிய
திருவிளையாடல் இது; மேல் - இனி, தன்னைப் பாடும் தொடைக்கு ஆடு
அன்பு அகன்று இகழ்ந்த - தன்னைப் பாடிய செய்யுளுக்குச் செய்யும் அன்பு
நீங்கி அவமதித்த, தென்னவனை முனிந்து - பாண்டியனை வெறுத்து,
தன்னைத் தொழுது போன - தன்னை வணங்கிப் பிணங்கிச் சென்ற,
இடைக்காடன் உடன்போய் - இடைக்காடனுடன் சென்று, பின்பு எழுந்தருளிப்
பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம் - பின் எழுந்தருளி அவனது பிணக்குத்
தீர்த்த திருவிளையாடலைக் கூறுவாம்.

     ஆள்தன், தன் சாரியை, தன்னைப் பாடும் - பாண்டியனைப்பாடும்.
தன்னைத் தொழுது இறைவனைத் தொழுது, செய்யுளுறுப்பாகிய தொடை
என்பது செய்யுளை யுணர்த்திற்று; பாமாலை என்றுமாம். ஆடு -
பொருந்திய. (1)

இந்திரன்றன் பழிதுரத்தி யரசளித்துப் பின்புகதி யின்ப மீந்த
சுந்தரன்பொன் னடிக்கன்பு தொடுத்துநறுஞ் சண்பகத்தார் தொடுத்துச்
                                              சாத்தி
வந்தனைசெய் திருத்தொண்டின் வழிக்கேற்பச் சண்பகப்பூ மாற
                                              வேந்தன்
அந்தரசூ டாமணியாஞ் சிவபுரத்து ணிறைசெல்ல மடைந்தா
                                            னிப்பால்.