(இ
- ள்.) இந்திரன் தன்பழி துரத்தி அரசு அளித்து - இந்திரன்
பழியை நீக்கி அவனுக்கு அரசுரிமையையுந் தந்து, பின்புகதி இன்பம் ஈந்த
சுந்தரன் - பின் வீட்டின்பத்தையும் அளித்த சோமசுந்தரக் கடவுளின், பொன்
அடிக்கு அன்பு தொடுத்து - பொன்போலுந் திருவடிகட்கு அன்பு கூர்ந்து,
நறுஞ்சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி - நறுமணங் கமழுஞ் சண்பகமாலை
தொடுத்து (அக்கடவுளுக்குச்) சாத்தி, வந்தனைசெய் திருத்தொண்டின் வழிக்கு
ஏற்ப - வழிபாடு செய்து வந்த திருத்தொண்டின் நெறிக்குப் பொருந்த,
சண்பகப்பூமாற வேந்தன் - சண்பக மாறனென்னும் மன்னன், அந்தர
சூடாமணியாம் சிவபுரத்துள் - (மேலேழுலகங்களுக்கும்) முடிவாயுள்ள
சூளாமணி போலுஞ் சிறந்த சிவபுரத்துள், நிறை செல்வம் அடைந்தான் -
நிறைந்த செல்வத்தைப் பெற்றான்; இப்பால் - பின்.
அந்தர
சூடாமணியாம் - மேலுள்ள உலகங்கட்குச் சூடாமணி
போன்றதாகிய;
"ஏழின் முடியதாஞ் சிவலோகம்" |
என்றார் முன்னும்.
(2)
ஆற்றன்மிகு
பிரதாப சூரியன்வங் கிசத்துவச னளவில் சீர்த்தி சாற்றரிய விரிபுமருத் தனன்சோழ
வங்கிசாந் தகன்றான் வென்றி மாற்றரிய புகழ்ச்சேர வங்கிசாந் தகன்பாண்டி வங்கி
சேசன்
தோற்றமுறு பரித்தேர்வங் கிசசிரோ மணிபாண்டீச் சுரன்றான்
மன்னோ. |
(இ
- ள்.) ஆற்றல்மிகு பிரதாப சூரியன் - வலிமிக்க பிரதாப
சூரியனும், வங்கிசத்துவசன் - வங்கிசத்துவசனும், அளவு இல் சீர்த்தி சாற்று
அரிய இரிபு மருத்தனன் - அளவிறந்த புகழ்வாய்ந்த சொல்லுதற்கரிய இரிபு
மருத்தனனும், சோழ வங்கிசாந்தகன் - சோழவங்கிசாந்தகனும், வென்றி
மாற்று அரிய புகழ்ச் சேர வங்கிசாந்தகன் - நீக்குதற்கரிய வெற்றியும் புகழும்
வாய்ந்த சேரவங்கிசாந்தகனும், பாண்டி வங்கிசேசன் - பாண்டிவங்கிசேசனும்,
தோற்றம் உறு பரித்தேர் வங்கிச சிரோமணி - பொலிவு மிக்க குதிரைபூண்ட
தேரினையுடைய வங்கிச சிரோமணியும், பாண்டீச்சுரன் - பாண்டீச்சுரனும்.
வம்சம்
என்பது வங்கிசம் எனத் திரிந்தது. இரிபு மருத்தனன் -
பகைவரைக் கொல்பவன். வங்கிசாந்தகன் - வமிசத்திற்குக் காலன்
போன்றவன். மன், ஓ - அசைகள். (3)
துணிவுடைய குலத்துவசன் வங்கிசபூ டணமாறன் சோம சூடா
மணிகுலசூ டாமணியே யிராசசூ டாமணியே மாற்றார் போற்றிப்
பணியவரும் பூபசூ டாமணியே குலேசபாண் டியனே யென்னக்
கணிதமுறு பதினைவர் வழிவழிவந் துதித்துநிலங் காவல் பூண்டார். |
(இ
- ள்.) துணிவுடைய குலத்துவசன் - போர்த்துணிவு மிக்க
குலத்துவசனும், வங்கிசபூடண மாறன் - வங்கிசபூடண மாறனும், சோம
சூடாமணி - சோமசூடாமணியும், குலசூடாமணி - குலசூடாமணியும், இராச
சூடாமணி - இராச சூடா மணியும், மாற்றார் போற்றிப் பணியவரும் பூப
|