சூடாமணி - பகைவர்கள்
துதித்து வணங்குமாறு வருந்தோற்றத்தையுடைய
பூப சூடாமணியும், குலேச பாண்டியன் என்னக் கணிதம் உறு பதினைவர் -
குலேச பாண்டியனும் என்று எண்ணப்படும் பதினைந்து பாண்டியர்களும்,
வழிவழி வந்து உதித்து நிலம் காவல் பூண்டார் - ஒருவர் பின் ஒருவராய்த்
தோன்றி நிலவுலகினைக் காத்தலைமேற் கொண்டார். (4)
அத்தகைய
பாண்டியருட் குலேசபாண் டியனென்னு மரசன்
றோண்மேல்
வைத்தவனி தலம்புரப்போ னிலக்கணமு மிலக்கியமும் வரம்பு
கண்டோன்
எத்தகைய பெருநூலு மெல்லைகண்டோ னாதலினா லிவனுக் கேற
முத்தமிழோர் பயில்சங்க மிடங்கொடுத்த தனையமணி முழவுத்
தோளான். |
(இ
- ள்.) அத்தகைய பாண்டியருள் - அத்தன்மையையுடைய
பாண்டியருள், அவனிதலம் தோள்மேல் வைத்து புரப்போன் - நிலவுலகைத்
தோளின்கண் வைத்துக் காப்பவனாகிய, குலேச பாண்டியன் என்னும் அரசன்
- குலேச பாண்டியன் என்னும் மன்னன், இலக்கணமும் இலக்கியமும் வரம்பு
கண்டோன் - இலக்கணமும் இலக்கியமுமாகிய இவற்றின் முடிவைக் கண்டு,
எத்தகைய பெருநூலும் எல்லை கண்டோன் ஆதலினால் - வேறு எத்தகைய
பெரிய நூலையும் முடிவு கண்டவனாதலால், இவனுக்கு - இப்பாண்டியனுக்கு,
முத்தமிழோர் பயில் சங்கம் ஏற இடம் கொடுத்தது - மூன்று தமிழையு
முணர்ந்த புலவர் இருக்கும் சங்கப்பலகை ஏறுதற்கு இடந்தந்தது;
அனையமணி முழவுத் தோளான் - அந்த அழகிய மத்தளம் போலுந்
தோளையுடைய குலேச பாண்டியன்.
புரப்போனாகிய
அரசன் என்க. வரம்பு கண்டு என எச்சமாக்குக.
வரம்பு கண்டோனும் எல்லை கண்டோனும் ஆதலினால் என
வுரைத்தலுமாம். (5)
கழிந்தபெருங்
கேள்வியினா னெனக்கேட்டு
முழுதுணர்ந்த கபிலன் றன்பாற்
பொழிந்தபெருங் காதன்மிகு கேண்மையினா
னிடைக்காட்டுப் புலவன் றென்சொன்
மொழிந்தரசன் றனைக்காண்டு மெனத்தொடுத்த
பனுவலொடு மூரித் தீந்தேன்
வழிந்தொழுகு தாரானைக் கண்டுதொடுத்
துரைப்பனுவல் வாசித் தானால். |
(இ
- ள்.) கழிந்த பெருங் கேள்வியினான் எனக்கேட்டு - மிகப்பெரிய
நூல் வல்லான் என்று (கற்றார் கூறக்) கேட்டு, முழுது உணர்ந்த
கபிலன்தன்பால் - கலைகள் முற்றுமுணர்ந்த கபிலனிடத்து, பொழிந்த பெருங்
காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் - பொழியப்பட்ட
பெரிய அன்புமிக்க நட்பினனாகிய இடைக்காட்டுப் புலவன், தென்சொல்
மொழிந்து அரசன் தனைக்காண்டும் என - ஒரு தமிழ்ப் பிரபந்தங் கூறிச்
சென்று அரசனைக் காண்போமென்று கருதி. தொடுத்த பனுவலொடு -
|