பக்கம் எண் :

142திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) ஆன பான்மையினால் . அவ்வாறாகியய தன்மையினால்,
அந்த மண்டபம் - அந்த மண்டபம் (இருத்தல்), ஞான நாயகன் - ஞானமே
வடிவாகிய இறைவனுடைய, நாள் மலர்த்தாள் தொழ - அன்றலர்ந்த
மலர்போலுந் திருவடிகளை வணங்க, ஊனம் இல் மதி . குற்ற மற்ற
நிறைமதியானது, வானம் மீனொடு வந்து - வானிலுள்ள உடுக்களோடு வந்து.
பதம் குறித்து வைகுவது ஒத்தது - செவ்வி நோக்கி இருத்தலை ஒத்தது எ-று.

     ஆன பான்மையினால் என்றது மேற் செய்யுளிற் கூறிய வியல்பைச்
சுட்டிற்று. பான்மை - முறைமை; தன்மை. சந்திரகாந்தத்திற்கு மதியும்,
நவமணிகட்கு வான்மீன்களும் உவமம். ஊனமில் மதி யென்பது நிறைமதி
யென்றும், களங்கமில்லாத மதியென்றும் பொருள்படும்; பிற்பொருளில்
இல்பொருளுவமை. (3)

அன்ன மண்டபந் தன்னு ளருந்தவம்
என்ன வேங்கை யதண்மே லிருந்தனன்
பன்னு கேள்விப் பதினெண் புராணமுஞ்
சொன்ன மாதவச் சூத முனிவனே.

     (இ - ள்.) அன்னமண்டவம் தன்னுள் - அந்த மண்டபத்தின்கண்;
அரும் தரும் என்ன - செய்தற்கரிய தவமே உருவெடுத்து இருந்தாற் போல,
வேங்கை அதண் மேல் - புலித்தோலின்மேல், பன்னு கேள்வி - (யாவரும்)
புகழுகின்ற கல்வி கேள்விகளையுடைய, பதினெண் புராணமும் சொன்ன
மாதவம் சூதமுனிவன் இருந்தனன் - பதினெட்டுப் புராணங்களையுங் கூறிய
பெருந்தவத்தினையுடைய சூதமுனிவன் இருந்தனன் எ - று.

     கேள்வியையுடைய சூதமுனிவ னென்க. தான் வியாசமுனிவன் பாற்
கேட்டவற்றை நைமிசவனத்து முனிவர்கட்கு உரைத்தனாகலின் 'பதினெண்
புராணமுஞ் சொன்ன' என்றார். பதினெண் புராணம் இவை யென்பதனை,

"மச்சம் கூர்மம் வராகம் வாமனம்
பிரமம் வைணவம் பாகவதம் சைவம்
இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காரூடம்
பிரமகை வர்த்தம் மார்க்கண்டே யம்காந்தம்
பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை
பாற்படு பதினெண் புராண மாகும்"

என்னும் திவாகரச் சூத்திரத்தா னறிக. (4)

அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே.

     (இ - ள்.) அந்த வேலையில் - அப்பொழுதில், அச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி, அம்மண்டபத்து
ஏறியே -