முன்னைமொழிந் திடைக்காடன் றணியாத
முனிவீர்ப்ப முந்திச் சென்றான்
அன்னவுரை திருச்செவியி னூறுபா
டெனவுறைப்ப வருளின் மூர்த்தி.
|
(இ
- ள்.) என்னையோ இகழ்ந்தனன் - அவன் என்னையோ
இகழ்ந்தான், சொல்வடிவாய் நின் இடம்பிரியா - சொல்லின் வடிவாக நினது
இடப்பாகத்தினின்றும் பிரியாத, இமையப்பாவை தன்னையும் -
பார்வதிதேவியையும், சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் -
அச்சொல்லின் பொருளான நின்னையுமே இகழ்ந்தனன், என் தனக்கு யாது
என்னா - அதனால் எனக்கு வந்த குறை யாது என்று, முன்னைமொழிந்து
- திருமுன் நின்று கூறி, இடைக்காடன் தணியாத முனிவுஈர்ப்ப முந்திச்
சென்றான் - இடைக்காடன் பொறுத்தற்கரிய சினம் இழுப்ப முன்னே
சென்றனன்; அன்னஉரை - அந்தச்சொல், திருச்செவியின் ஊறுபாடு என
உறைப்ப - திருச்செவியின்கண் பேற்படைபோலுஞ் சென்று தைக்க, அருளின்
மூர்த்தி - கருணை வடிவினனாகிய அச்சோமசுந்தரக் கடவுள்.
பொருளமைந்த
சொற்களாற் றொடுக்கப்பெற்ற செய்யுளை
இகழ்ந்தமையின் சொல்வடிவாகிய இறைவியையும் பொருள்வடிவாகிய
இறைவனையும் இகழ்ந்தானாம் என்றார். சொல்லும் பொருளும் பேதமும்
அபேதமுமின்றி நிற்றல்போல் சத்தியும் சிவனும் இயைந்து நிற்பரென்க;
ஊறுபாடு என்பது கருவியை உணர்த்திற்று. (10)
போனவிடைக்
காடனுக்குங் கபிலனுக்கு மகத்துவகை
பொலியுமாற்றான்
ஞானமய மாகியதன் னிலிங்கவுரு மறைத்துமையா நங்கை
யோடும்
வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோயிலினேர்
வடபால்
வையை
ஆனநதித் தென்பாலோ ராலயங்கண் டங்கணினி தமர்ந்தான்
மன்னோ. |
(இ
- ள்.) போன இடைக்காடனுக்கும் - (அங்ஙனம் கூறிச் சினந்து)
சென்ற இடைக்காடனுக்கும், கபிலனுக்கும் அகத்துஉவகை பொலியும்
ஆற்றால் - (அவன் உயிர் நண்பனாகிய) கபிலனுக்கும் மனத்தின்கண்
மகிழ்ச்சி மிகுமாறு, வானவர் தம்பிரான் - தேவர்கள் தேவனாகிய
அவ்விறைவன், ஞானமயமாகிய தன் இலிங்க உருமறைத்து - ஞானமயமாகிய
தனது இலிங்கவுருவை மறைத்து, உமையாம் நங்கையோடும் எழுந்து -
உமைப் பிராட்டியுடன் எழுந்து, புறம்போய் - வெளியே சென்று, தன்
கோயிலின்நேர் வடபால் - தனது திருக்கோயிலுக்கும் நேரே வடதிசையில்,
வையை ஆனநதித் தென்பால் - வையையாற்றின் தென்பக்கத்து, ஓர்
ஆலயம் கண்டு இனிது அமர்ந்தான் - ஒரு திருக்கோயிலை ஆக்கி அதன்
கண் இனிதாக அமர்ந்தருளினான்.
மன்,
ஓ அசைகள். (11)
|