கொலையினையோ ரவுணர்புர நொடிவரையிற்
பொடியாகக் குனித்த மேருச்
சிலையினையோ பழையசிவ புரத்தினையோ
வருவிமணி தெறிக்கும் வெள்ளி
மலையினையோ தம்மைமறந் துனைநினைப்பார்
மனத்தினையோ வாழ்த்தும் வேதத்
தலையினையோ வெங்குற்றா யெங்குற்றா
யென்றென்று தளரு மெல்லை. |
(இ
- ள்.) கொலையினை ஓர் அவுணர் புரம் - கொலைபுரியும்
நெறியை ஆராய்ந்தறியும் அவுணர்களின் திரிபுரம், நொடிவரையில்
பொடியாக - நொடிப் பொழுதிலே பொடியாகு மாறு, குனித்த
மேருச்சிலையினையோ - வளைத்த மேருவாகிய வில்லை யுடையோய்,
பழைய சிவபுரத்தினையோ - நீ பழைய சிவலோகத்தின் கண் உள்ளாயோ,
அருவிமணி தெறிக்கும் வெள்ளிமலையினையோ - அருவிமணிகளை எறியும்
கைலாய மலையின்கண் உள்ளாயோ, தம்மை மறந்து உனை நினைப்பார்
மனத்தினையோ - தம்மை மறந்து நின்னை நினைக்கின்ற அடியார்கள்
மனத்தின்கண் உள்ளாயோ, வாழ்த்தும் வேதத் தலையினையோ - (நினை
இடையறாது) வாழ்த்துகின்ற மறை முடியின்கண் உள்ளாயோ, எங்கு உற்றாய்
எங்கு உற்றாய் என்று என்று தளரும் எல்லை - (இவற்றுள்) எங்குச்
சென்றாய் எங்குச் சென்றாய் என்று சொல்லிச் சொல்லி வருந்தும் பொழுது.
நொடி
- கைந்நொடி; மாத்திரைப் பொழுதை யுணர்த்திற்று
சிவபுரத்தினையுற்றாயோ, வெள்ளி மலையினை யுற்றாயோ என்றிங்ஙனம்
கூட்டியுரைத்தலுமாம்; சிவபுரத்தை யுடையாய், வெள்ளி மலையை யுடையாய்
என்றிங்ஙனம் கூறி, ஓகாரம் புலம்பின்கண் வந்ததென் றுரைத்தலும்
பொருந்தும். அடுக்குகள் அவலங்குறித்து நின்றன. (16)
சிலர்வந்து மன்னாவோ ரதிசயங்கண்
டனம்வையைத் தென்சா ராக
அலர்வந்தோன் படைத்தநாண் முதலொருகா
லமுங்கண்ட தன்று கேள்வித்
தலைவந்த புலவரொடு மாலவா
யுடையபிரான் றானே செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்திறைகொண்
டுறைகின்றான் மாதோ வென்றார்.* |
(இ
- ள்.) சிலர்வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் - சிலர் வந்து
வேந்தே யாங்கள் ஒரு அதிசயத்தினைக் கண்டோம் (அது யாதெனில்),
வையைத் தென்சாராக - வையை யாற்றின் தென்பாலாக, அலர் வந்தோன்
(பா
- ம்.) * யாதோ வென்றார்.
|