படர்ந்துபணிந்
தன்புகுக்குங்* கண்ணீர்சோர்ந்
தானந்தப் பௌவத் தாழ்ந்து
கிடந்தெழுந்து நாக்குழறித் தடுமாறி
நின்றிதனைக் கிளக்கும் வேதந்
தொடர்ந்தறியா வடிசிவப்ப நகர்புலம்ப
வுலகீன்ற தோகை யோடிங்
கடைந்தருளுங் காரணமென் னடியேனாற்
பிழையுளதோ வையா வையா. |
(இ
- ள்.) படர்ந்து பணிந்து - அங்ஙனஞ் சென்று கண்டு வணங்கி,
அன்பு உகுக்கும் கண்ணீர் சேர்ந்து - அன்பானது சிந்துகின்ற கண்ணீரைப்
பொழிந்து, ஆனந்தப் பௌவத்து ஆழ்ந்து கிடந்து - இன்பக்கடலுள்
அழுந்திக் கிடந்து, எழுந்து - பின்எழுந்து, நாக்குழறித் தடுமாறி நின்று
இதனைக் கிளக்கும் - நாவானது குழறுற்றுத் தடுமாறி நின்று இதனைக்
கூறுவான்; வேதம் தொடர்ந்து அறியா அடி சிவப்ப - மறைகளுந்
தொடர்ந்தறியாத திருவடி சிவக்கவும், நகர் புலம்ப - நகரிலுள்ளோர்
வருந்தவும், உலகு ஈன்ற தோகையோடு இங்கு அடைந்தருளும் காரணம்
என் - உலகினைப் பெற்ற அம்மையோடும் இங்கு வந்து தங்கியருளிய
காரணம் யாது, அடியேனால் பிழையுளதோ ஐயா ஐயா - ஐயனே ஐயனே
அடியேனால் ஏதாயினும் தவறு ஏற்பட்டதோ.
நாக்குழறலும்
தடுமாறலும் முதலாயின அன்பின் மிகுதியால் நிகழ்வன.
புலம்ப - தனிமையுற என்றுமாம். அடுக்கு முறையிடற்கண் வந்தது. (19)
அல்லதையென்
றமராலென் பகைஞராற்
கள்வரா லரிய கானத்
தொல்லைவிலங் காதிகளா லிடையூறின்
றமிழ்நாட்டி லெய்திற் றாலோ
தொல்லைமறை யவரொழுக்கங் குன்றினரோ
தவந்தருமஞ் சுருங்கிற் றாலோ
இல்லறனுந் துறவறனும் பிழைத்தனவோ
யானறியே னெந்தா யெந்தாய். |
(இ
- ள்.) அல்லது - அன்றி, என் தமரால் - என்
பரிசனங்களாலாயினும், என் பகைஞரால் - எனது பகைவரா லாயினும்,
கள்வரால் - கள்வரா லாயினும், அரிய கானத்து எல்லை விலங்கு
ஆதிகளால் - செல்லுதற்கரிய காட்டின்கண் உள்ள விலங்கு முதலாயவைகளா
லாயினும், இன்தமிழ் நாட்டில் இடையூறு எய்திற்றோ - இனிய இத்தமிழ்
நாட்டின்கண் இடையூறு நேர்ந்ததோ, மறையவர் தொல்லை ஒழுக்கம்
குன்றினரோ - வேதியர் தமக்குத் தொன்று தொட்டு வந்த ஒழுக்கத்திற்
குறைந்தனரோ,
(பா
- ம்.) * அன்புருக்கும்.
|