(இ
- ள்.) அடியனேன் முன்னம் செய்த அபராதம் இரண்டும்
தீரும்படி பொறுத்தருள்வாய் என்று - அடியேன் முன் செய்த குற்றமிரண்டும்
நீங்குமாறு பொறுத்தருள வேண்டுமென்று, பல முறை பரவித் தாழ்ந்து - பல
முறை துதித்து வணங்கி, மடிவு இலா மகிழ்ச்சி பொங்க - அழிவில்லாத
மகிழ்ச்சி மேலிட, சிறிது வரங்களும் வேண்டி - சில வரங்களையும் விரும்பிப்
பெற்று, கடியதன் நகரம் புக்கான் - காவலையுடைய தனது நகரத்திற்
புகுந்தான்; குடதிசைக் காவல் வேந்தன் - மேற்றிசைக் காவலனாகிய வருணன்.
அபராதம்
இரண்டு - மதுரையை யழிக்கக் கடலை யேவியதும்,
முகில்களை யேவியதும். வேண்டிப் பெற்று என விரிக்க. கடிய, குறிப்புப்
பெயரெச்சம். வேந்தன் என்பதனை மேல் 21-ஆம் செய்யுளிலுள்ள
நீர்க்கோன் என்பதனோடு கூட்டி, வேந்தனாகிய நீர்க்கோன் என்க, (25)
வன்றிறல்
வருணன் விட்ட மாரியை விலக்க வீசன்
மின்றிகழ் சடையி னின்று நீங்கிய மேக நான்குங்
குன்றுபோ னிவந்து நான்கு கூடமாக் கூட லாலே
அன்றுநான் மாடக் கூட லானதான் மதுரை மூதூர். |
(இ
- ள்.)
வன்திறல் வருணன் விட்ட மாரியை விலக்க - மிக்க
வலியினையுடைய வருணன் ஏவிய முகில்களைத் தடுக்கும் பொருட்டு, ஈசன்
மின்திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும் - இறைவனது மின்போல
விளங்கும் சடையினின்று நீங்கிய நான்கு முகில்களும், குன்றுபோல் நிவந்து
நான்கு கூடமாக் கூடலால் - மலைபோல உணர்ந்து நான்கு மாடமாகக்
கூடுதலால், மதுரை மூதூர் அன்று நான் மாடக் கூடல ஆனது -
மதுரையாகிய பழைய பதியானது அந்நாள் தொட்டு நான்மாடக் கூடல்
என்னும் பெயருடையதாயிற்று.
வன்றிறல்
: ஒருபொருட் பன்மொழி, ஆக வென்பது ஈறுதொக்கது.
அன்று தொட்டென்க. ஆல் : அசை. (26)
ஆகச்
செய்யுள் 1332.
|