ஓங்குதண் பணைசூழ் நீப வனத்தைநீத் தொருபோ தேனும்
நீங்குவ மல்லேங் கண்டா யாயினு நீயும் வேறு
தீங்குளை யல்லை காடன் செய்யுளை யிகழ்த லாலே
ஆங்கவ னிடத்தியாம் வைத்த வருளினால் வந்தே மென்னா, |
(இ
- ள்.) ஓங்கு தண்பணை சூழ் நீப வனத்தை நீத்து - சிறந்த
தண்ணிய வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு, ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் - ஒரு பொழுதாயினும் நீங்கியிருப்பேமல்லேம்; ஆயினும்
- ஆனாலும், நீயும் வேறு தீங்குளை அல்லை - நீயும் வேறு தீங்குடையை
அல்லை; காடன் செய்யுளை இகழ்தலால் - இடைக்காடன் செய்யுளை
அவமதித்தாயாதலால், ஆங்கு அவனிடத்து யாம் வைத்த அருளினால்
வந்தேம் என்னா - அப்பொழுதே அவன்கண் யாம் வைத்த அருளினால்
இங்கு வந்தேமென்று.
நீங்குவமல்லேம்
நீயும் தீங்குளையல்லை ஆயினும் இகழ்தலாலும்
அருளாலும் வந்தேம் என முடிக்க. கண்டாய், முன்னிலையசை; காடன்,
முன்மொழி கெட்டு நின்றது. ஆங்கு, அசையுமாம். இடத்தியாம்,
குற்றியலிகரம். (28)
பெண்ணினைப்
பாகங் கொண்ட பெருந்தகைப் பரம யோகி
விண்ணிடை மொழிந்த மாற்ற மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை யன்றோ
எண்ணிய பெரியோர்க் கென்னா வேத்தினா னிறைஞ்சி னானே.
|
(இ
- ள்.) பெண்ணினைப் பாகம் கொண்ட - உமையை ஒரு
பாகத்திற் கொண்ட, பெருந்தகைப் பரமயோகி - பெரிய தகுதியையுடைய
மேலான யோகியாகிய இறைவன், விண்ணிடை மொழிந்த மாற்றம் -
வானின்கண் அசரீரியாகக் கூறிய வார்த்தையை, மீனவன் கேட்டு -
பாண்டியன் கேட்டு, வானோர் புண்ணிய - தேவர்களின் புண்ணியனே,
எண்ணிய பெரியோர்க்கு - யாவராலும் நன்கு மதிக்கப்பெறும்
பெருமையுடையார்க்கு, சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
என்னா - சிறியோர்கள் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுவது
பெருமையல்லவா என்று, ஏத்தினான் இறைஞ்சினான் - துதித்து
வணங்கினான்.
பெண்ணினைப்
பாகங் கொண்ட பரமயோகி என்றது இறைவன்
உயிர்கட்குப் போகம் அருளுதற் பொருட்டு உமையை ஒரு கூற்றிற்
கொண்டானாயினும் தூய வுடம்பும் இயல்பாகவே பாசமின்மையும் உடையன்
என்றவாறு;
"மங்கையோ டிருந்தே யோகு செய்வானை" |
என்பது கருவூர்த்தேவர்
திருவிசைப்பா. சிறியோர் குற்றம் பொறுப்பது
பெரியார்க்குப் பெருமை என்னும் கருத்தினை
|