பக்கம் எண் :

புராண வரலாறு155



முனிவன்; அந்த உத்தம முனிவர் யாவரும் கேட்க உணர்த்துவான் -
அந்தச் சிறந்த முனிவர்களெல்லாரும் கேட்கும்படி சொல்வா னாயினான்
எ - று.

     சிறப்பும், திருவிளையாட்டும் உணர்த்துவான் என்க. வித்தகன் -
சதுரப்பாடுடையவன்; ஞானி. கேட்க - செவியேற்க. மேலே பதினாறாஞ்
செய்யுளில் 'விதியினிற் புகல்கின்றனன் வியாதன் மாணாக்கன்' என்று
கூறிவைத்து, பின்பு அகத்தியன் முனிவர்கட்கு உரைப்பதாக முழுதும்
கூறப்படுகின்றது; ஆகலின் அறுபத்து நான்காவது திருவிளையாடலின்
முடிபில், என அகத்தியன் முனிவர்கட்குக் கூறினான எனத்
திருக்கைலையில் சிவ தீர்த்தத்தின் மருங்குள்ள மாதவர்கட்குக் கூறிப் பின்
அம்முனிவர்கள் அகத்தியனுடன் வந்து அருச்சித்துப் பேறு பெற்றதனையும்
அருளிச் செய்தனன்' என வருவித் துரைத்துக் கொள்க. (25)

                       ஆகச் செய்யுள் - 231