"வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனே"
எனவும்,
"பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கடம் பொய்யினையே" |
எனவும் வரும் திருவாசகங்களிற்
காண்க. ஏத்தினான், முற்றெச்சம். (29)
அடிபணிந் தேத்தி னானை யருள்சுரந் தசையு மின்னுக்
கொடியணி மனையிற் போக்கிக் கோமள வல்லி யோடும்
உடனுறை புலவ ரோடு மொல்லைதன் கோயில் புக்கான்
வடதிரு வால வாயில் வந்துவீற் றிருந்த வள்ளல். |
(இ
- ள்.) வடதிரு ஆலவாயில் வந்து வீற்றிருந்த வள்ளல் -
வடதிருவாலவாயின்கண் (இடைக்காடன் பொருட்டு) வந்து விற்றிருந்த
வள்ளலாகிய சோம சுந்தரக்கடவுள், அடிபணிந்து ஏத்தினானை - அடி
வணங்கித் துதித்த அக்குலேச பாண்டியனை, அருள்சுரந்து - கருணை
கூர்ந்து, அசையும் மின்னுக்கொடி அணி மனையில்போக்கி - அசைகின்ற
மின்போன்ற கொடிகட்டிய மாளிகையிற்போகவிடுத்து, கோமள வல்லியோடும்
- பசுங்கொடி போன்ற பிராட்டியாரோடும், உடன் உறை புலவரோடும்
ஒல்லை தன் கோயில் புக்கான் - உடன் உறைந்த சங்கப் புலவர்களோடும்
விரைந்து தனது திருக்கோயிலுட் புகுந்தருளினான்.
ஏத்தினானைப்
போக்கியென்க. மின் உகரச்சாரியை பெறுதலை,
"மின்பின் பன்கன் தொழிற்பெய ரனைய" என்னும் நன்னூற் சூத்திரத்தாலறிக.
(30)
மின்மதிச் சடையி னான்பி னடந்துபோய் விடைகொண் டேகும்
மன்னவன் றன்னைப் பாடி வந்தவன் றன்னை மாட்சித்
தன்மைசால் சங்க வாணர் தம்மொடுங் கொடுபோ யென்றும்
பொன்மகள் காணி கொண்ட புரிசைசூழ் கோயில் புக்கான். |
(இ
- ள்.) மின்மதிச் சடையினான் பின் நடந்து போய் - மின்னலை
ஒத்த சந்திரனை அணிந்த சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின் பின்
திருக்கோயிலுக்கு நடந்து சென்று, விடை கொண்டு ஏகும் மன்னவன் -
விடைபெற்று மீளும் பாண்டியன், தன்னைப் பாடி வந்தவன் தன்னை -
தன்னைப் பாடிவந்த இடைக்காடனை, மாட்சித்தன்மை சால் சங்க வாணர்
தம்மொடும் கொடு போய் - மாண்பின் தன்மைநிறைந்த சங்கப்புலவரோடும்
அழைத்துக் கொண்டு சென்று, என்றும் பொன் மகள் காணிகொண்ட -
எஞ்ஞான்றுந் திருமகள் தனக்கு ஆட்சியிடமாக் கொண்ட, புரிசை சூழ்
கோயில் புக்கான் - மதில் சூழ்ந்த மாளிகையிற் புகுந்தனன்.
|