திருவைந்தெழுத்துச்
சிவபெருமானுக்கு உருவமாதலைச சிவஞான
சித்தியார் முதற்சூத்திரத்தா லறிக; இது முன்னுங் காட்டப் பெற்றது. சாதனமே
பொருளாவது எனப் பிரித்துக் கூட்டுக. தலை - முதல் : முதல்வன். (2)
அத்த கைச்*சிவ
சாத னந்தனி லன்பு மிக்கவ னொழுகலால்
அத்தன் மெய்த்திரு வைந்தெ ழுத்தொலி யாலு நீற்றொளி யாலுமுட்
பைத்த வல்லிரு ளும்பு றத்திரு ளுஞ்சி தைந்து பராபரன்
வித்த கத்திரு வேட மானது+மீன வன்றிரு நாடெலாம். |
(இ
- ள்.) அத்தகைச் சிவசாதனம்தனில் - அத்தன்மையுடைய
சிவசாதனத்தின்கண், அன்பு மிக்கு அவன் ஒழுகலால் - அன்பு மிகுந்து அப்
பாண்டியன் ஒழுகி வருதலால், மீனவன் திருநாடு எலாம் - அவன் திருநாடு
முழுதும், அத்தன் மெய்த் திரு ஐந்து எழுத்து ஒலியாலும் - இறைவன்
திருவுருவமாகிய திருவைந்தெழுத்தின் ஒலியாலும், நீற்று ஒளியாலும் -
திருநீற்றினது ஒளியாலும் (முறையே), உள் வைத்த வல் இருளும் - உள்ளே
பரந்த வலிய மலவிருளும், புறத்து இருளும் சிதைந்து - புறவிருளும் கெட்டு,
பராபரன் வித்தகத் திருவேடம் ஆனது - சிவபெருமானது மேன்மையுடைய
திருவேடமாகப் பொலிந்தது.
'மன்ன
னெவ்வழி மன்னுயி ரவ்வழி' என்பவாகலின் அரசன் சிவ
சாதனத்தால் அன்பு மிக்கானாகவே நாட்டிலுள்ளாரும் அங்ஙனமாயினரென்க.
திருவைந்தெழுத்தொலியால் அகவிருளும் திருநீற்றொளியால் அகவிருளுடன்
புறவிருளும் சிதைந்து என்றுமாம். புறத்திருள் - பூதவிருள். பைத்த - பரந்த.
பராபரன் - பரமும் அபரமும் ஆனவன். (3)
நாயி னுங்கடை யான மாசுட னள்ளி ருட்புரை நெஞ்சரெண்
ணாயி ரஞ்சமண் வேட ரன்ன தறிந்து கொண்டு வெகுண்டழ
றோயி ரும்பென மான வெங்கனல் சுட்டி டத்தரி யார்களாய்
மாயி ருந்தமிழ் மாற னைத்தெற வஞ்ச வேள்வி யியற்றுவார். |
(இ
- ள்.) நாயினும் கடை ஆன மாசு உடல் - நாயினுங் கடைப்பட்ட
அழுக்குடம்பினையுடைய, நள் இருள் புரை நெஞ்சர் எண்ணாயிரம் சமண்
வேடர் - நடு இரவின் இருளையொத்த நெஞ்சினை யுடை யுடையவராகிய
சமணகுரவர் எண்ணாயிரவரும், அன்னது அறிந்து கொண்டு வெகுண்டு -
அதனை அறிந்து சினந்து, அழல் தோய் இரும்பு என - நெருப்பிற் காய்ச்சிய
இரும்பு போல, மான வெங்கனல் சுட்டிட - மானமாகிய கொடிய நெருப்புச்
சுடாநிற்க, தரியார்களாய் - பொறார்களாகி, மா இருந்தமிழ் மாறனைத் தெற -
பெரிய தமிழை வளர்க்கும் பாண்டியனைக் கொல்லுதற்கு, வஞ்ச வேள்வி
இயற்றுவார் - வஞ்ச வேள்வி ஒன்றினைச் செய்வாராயினர்.
உடலையுடைய
நெஞ்சராகிய என விரித்து வேடரென்பதுடன் தனித்தனி
கூட்டுக. தங்கள் சமயத்திற்குரிய ஒழுக்கமுடையரல்லரென்பார்
(பா
- ம்.) *இத்தகை. +வேடமாயின.
|