பக்கம் எண் :

தலவிசேடப் படலம்159



     தழையும் - தழைதற்குக் காரணமான எனினுமாம். கேட்டவுடன் -
பெயர் செவியுறப் பெற்றவுடனே; விரும்பியவுடனுமாம். மீண்டு - மீள,
அதன்பின்; மீண்டு பிறந்தெனலுமாம். பிறந்திறவாமையாகிய கதி யென்க. (5)

திருவால வாயென்று கேட்டவரே
     யறம்பெறுவர் செல்வ மோங்குந்
திருவால வாயென்று நினைத்தவரே
     பொருளடைவர் தேவ தேவன்*
திருவால வாயதனைக் கண்டவரே
     யின்பநலஞ் சேர்வ ரென்றுந்
திருவால வாயிடத்து வதிந்தவரே
     பரவீடு சேர்வ+ ரன்றே.

     (இ - ள்.) திருவாலவாய் என்று கேட்டவரே - திருவாலவாயென்று
ஒருவர் சொல்லக் கேட்டவர்களே, அறம் பெறுவர் - அறத்தை யடைவர்;
செல்வம் ஓங்கும் - செல்வமிகுந்த, திருவாலவாய் என்று நினைத்தவரே -
திருவாலவாயென்று சிந்தித்தவர்களே, பொருள் அடைவர் - பொருளைப்
பெறுவர்; தேவதேவன் - தேவர்களுக்குத் தேவனாகிய சோமசுந்தரக்
கடவுளின், திருவாலவாய் அதனைக் கண்டவரே - திருவாலவாயைப்
பார்த்தவர்களே; இன்ப நலம் சேர்வர் - இன்பமாகிய நன்மையை
அடைவர்; என்றும் - எப்போதும்; திருவாலவாய்ய இடத்து வதிந்தவரே -
திருவாலவாயின்கண் உறைந்தவர்களே, பரவீடு சேர்வர் - மேலான
வீட்டுலகை அடைவார்கள் எ - று.

     கேட்டல் முதலியன முறையே அறம் முதலிய நாற்பொருளும்
பயக்குமென்றார். ஏகாரம் : பிரிநிலையும் தேற்றமுமாம். பரவீடு - பர
முத்தியுமாம். அன்று, ஏ : அசை. (6)

சுரநதிசூழ் காசிமுதற் பதிமறுமைக்
     கதியளிக்குந் தூநீர் வையை
வரநதிழே் திருவால வாய்சீவன்
     முத்திதரும் வதிவோர்க் கீது
திரனதிகம் பரகதியும் பின்கொடுக்கு
     மாதலினிச் சீவன் முத்தி
புரனதிக மென்பதெவ னதற்கதுவே
     யொப்பாமெப் புவனத் துள்ளும்.

     (இ - ள்.) சுரநதி சூழ் - கங்கையாறு சூழ்ந்த, காசிமுதல் பதி -
காசி முதலிய பிறபதிகள், மறுமைகதி அளிக்கும் - மறுமையில் வீட்டுலகைக்
கொடுக்கும்; தூநீர் வையை வரநதிசூழ் - தூய்மையான நீரினை யுடைய


     (பா - ம்.) * தேவ தேவைத் திருவாலவாயிடத்து. +வீட்டு நெறி சேர்வர்.