பக்கம் எண் :

வலைவீசின படலம் 161



ஐம்பத்தேழாவது வலைவீசின படலம்

           [அறுசீரடியாசிரிய விருத்தம்]
மின்றிரித் தன்ன வேணி வேதிய னிடைக்கா டன்பின்
சென்றுமீண் டனையான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம்
இன்றுரை செய்து முந்நீ ரெறிவலை வீசி ஞாழன்
மன்றலங் குழலி னாளை மணந்துமீள் வண்ணஞ் சொல்வாம்.

     (இ - ள்.) மின்திரித்தன்ன வேணிவேதியன் - மின்னலைத்திரித்து
விட்டாலொத்தசடையையுடைய அந்தணனாகிய சோமசுந்தரக்கடவுள்,
இடைக்காடன் பின் சென்று மீண்டு - இடைக்காடன் பின்னேபோய் மீண்டு,
அனையான் கொண்ட பிணக்கினைத் தீர்த்தவண்ணம் - அவன் கொண்ட
பிணக்கினைத் தீர்த்தருளிய திருவிளையாடலை, இன்று உரை செய்தும் -
இன்று கூறினேம்; முந்நீர் எறிவலை வீசி - கடலின்கண் எறியும் வலையினை
வீசி, ஞாழல் மன்றல் அம் குழலினாளை - புலிநகக் கொன்றைமலரின் மணம்
நிறைந்த அழகிய கூந்தலையுடைய உமையம்மையை, மணந்து மீள்வண்ணம்
சொல்வாம் - திருமணஞ்செய்து மீண்டருளிய திருவிளையாடலை (இனிக்)
கூறுவாம்.

     திரித்தாலன்ன என்பது விகாரமாயிற்று. நெய்தற்றலைவற்குப்
புதல்வியாகத் தோன்றியிருந்தமையின் 'ஞாழல் மன்றலங்குழலினாள்'
என்றார். ஞாழல் - குங்குமமரம் என்பாருமுளர். (1)

அந்தமி லழகன் கூட லாலவா யமர்ந்த நீல
கந்தர னுலக மீன்ற கன்னியங் கயற்க ணாளாங்
கொந்தவி ழலங்கற் கூந்தற் கொடிக்குவே றிடத்து வைகி
மந்தண மான வேத மறைப்பொரு ளுணர்த்து மாதோ.

     (இ - ள்.) அந்தம்இல் அழகன் - முடிவில்லாத பேரழகனும், கூடல்
ஆலவாய் அமர்ந்த நீலகந்தரன் - கூடலென்னுந் திருவாலவாயில்
எழுந்தருளிய நீலகண்டனுமாகிய சோமசுந்தரக் கடவுள், உலகம் ஈன்ற கன்னி
- உலகத்தைப்பெற்ற கன்னியாகிய, அங்கயற்கணாளாம் -
அங்கயற்கண்ணம்மையாகிய, கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு -
கொத்தில் மலர்ந்த மலர் மாலையை யணிந்த கூந்தலை யுடைய
கொடிபோல்வார்க்கு, வேறு இடத்து வைகி - தனியிடத்தில் இருந்து, மந்