உத்தமமாந் திருவால வாய்மிகவுங்
கனத்ததுகண் டுலகின் மேலா
வைத்ததல மிதுவென்றா லிதன்பெருமை
யாவரே வழுத்தற் பாலார். |
(இ
- ள்.) நான்கு இரண்டு கைத்தலம் உடைய மலர்க் கடவுள் -
எட்டுத் திருக்கரங்களையுடைய தாமரைமலரில் வசிக்கும் நான்முகன், மேல்
ஒருநாள் - முன் ஒருநாளில், கயிலை ஆதி எத்தலமும் - திருக்கயிலாயம்
முதலான எல்லாப் பதிகளையும், ஒரு துலை இட்டு - ஒரு தராசின் தட்டில்
வைத்து, இத்தலமும் ஒரு துலை இட்டு - இந்தப் பதியையும் ஒரு தட்டில்
வைத்து, இரண்டும தூக்க - இரண்டையும் தூக்க, உத்தமம் ஆம்
திருவாலவாய் - சிறந்த திருவாலவாயானது, மிகவும் கனத்தது கண்டு -
மிக்க கனத்திருத்தலைப் பார்த்து, உலகில் மேலா வைத்த தலம் இது
என்றால் - உலகங்களில் உயர்ந்ததாக அறுதியிட்டு வைத்த பதி இது
என்றால் - உலகங்களில் உயர்ந்ததாக சிறப்பை, வழுத்தற் பாலார் யாவர் -
வரையறுத்துக் கூறும் பகுதியை யுடையார் யாவர் (எவருமில்லை) எ - று.
கைத்தலம்
- கையாகிய தலம்; கை. துலை - தராசு. தராசின் - ஒரு
தட்டினை ஒரு துலை யென்றார். தூக்க - தூக்கி நிறுக்க. கனத்தல் -
கனமாதல். வழுத்தல், ஈண்டுக் கூறுதல். (20)
அத்திருமா நகரின்பேர் சிவநகரங்
கடம்பவன மமர்ந்த சீவன்*
முத்திபுரங் கன்னிபுரந் திருவால
வாய்மதுரை முடிா ஞானம்
புத்திதரும் பூவுலகிற் சிவலோகஞ்
சமட்டிவிச்சா புரந்தென் கூடல்
பத்திதரு துவாதசாந் தத்தலமென்
றேதுவினாற் பகர்வர் நல்லோர். |
(இ
- ள்.) அத் திருமாநகரின் பேர் - அந்தத் தெய்வத்தன்மை
பொருந்திய சிறந்த திருப்பதியின் பெயர்களை, சிவ நகரம் கடம்ப வனம்-
சிவ நகரமென்றும் கடம்பவனமென்றும், அமர்ந்த சீவன் முத்திபுரம் -
விரும்பிய சீவன் முத்திபுரம் என்றும், கன்னிபுரம் திருவாலவாய் மதுரை -
கன்னிபுரமென்றும் திருவாலவாய் என்றும் மதுரை என்றும், முடியா ஞானம்
புத்திதரும் பூவுலகில் சிவலோகம் - அழியாத ஞானத்தையும் போகத்தையுங்
கொடுக்கின்ற பூலோக புரமென்றும் தென்கூடல் என்றும், பத்திதரும் துவாத
சாந்தத் தலம் என்று - அன்பை யருளுகின்ற துவாத சாந்தப்பதி என்றும்,
நல்லோர் ஏதுவினால் பகர்வர் - உயர்ந்தோர் ஒவ்வொரு காரணங்களாற்
கூறுவர் எ - று.
(பா
- ம்.) * அமர்ந்தோர் சீவன், சிவநகரோத்தமங் கடம்ப வடவி
சீவன்.
|