பக்கம் எண் :

168திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அழித்து, போகம் நல்கும் - போகத்தைக் கொடுக்கின்ற, தமனிய முளரி -
பொற்றாமரையானது, வந்த வரவும் - தோன்றிய வரலாறும், அக்கனகக்
கஞ்சப்பெருமையும் - அப்பொற்றாமரையின் சிறப்பும், வளனும் - வளப்பமும்
ஆகிய இவற்றை, நன்கா உரை செய்தும் - நன்றாகக் கூறுவேம், கேண்மின்
என்னா - கேளுங்கள் என்று, முனிவரன் உரைக்கும் - முனிபுங்கவனான
அகத்தியன் கூறுவானாயினான் எ - று.

     விரதத்தையும் தவத்தையும் உடையீர் என்றும், விரதமாகிய தவத்தை
யுடையீர் என்றும் உரைத்தலுமாம். வீட்டி - வீழ்ததி யென்பதன் மரூஉ.
தமனிய முளரி, கனகக் கஞ்சம் என்ப பெயர். சரமாக, நன்காக என்பன
விகாரமாயின. என்று கூறிப்பின் உரைப்பானாயினான். மன், ஓ : அசை. (23)

                      ஆகச் செய்யுள் - 254.