இரவிமுன் னிருள தெனவிறை யருண்முன்
னிருண்மல வலியென வெங்கும்
பரவிய வமுதால் விடமகன் றவசப்
படிவொழிந் தியாவரு மின்பம்
விரவிய களிப்பின் மேவினா ரிருந்தார்
மீனவர் பெருந்தகை வேந்தன்
அரவணி சடையாற் கன்புருத் தானே
யாகிமண் காவல்செய் திருந்தான். |
(இ
- ள்.) இரவி முன் இருளது என சூரியன் முன்னர் இருள் ஓடுதல்
போலவும், இறை அருள் முன் இருள் மலவலி என - இறைவனது திருவருள்
முன்னே ஆணவ மலவன்மை கெடுதல் போலவும், எங்கும் பரவிய அமுதால்
- எவ்விடத்தும் பரவிய அமுதத்தினால், விடம் அகன்று - நஞ்சு நீங்கப்
பெற்று, அவசப் படிவு ஒழிந்து - மயக்க வடிவம் நீங்கி, யாவரும் -
அனைவரும், இன்பம் விரவிய களிப்பின் மேவினார் இருந்தார் -
இன்பங்கலந்த மகிழ்ச்சியிற் பொருந்தி இருந்தனர்; மீனவர் பெருந்தகை
வேந்தன் - பாண்டியர் பெருந்தகையாகிய அனந்த குணமன்னன், அரவு
அணிசடையாற்கு அன்பு உருத்தானே ஆகி - பாம்பினை அணிந்த
சடையையுடைய சோம சுந்தரக் கடவுளுக்கு அன்பே வடிவமாகி, மண் காவல்
செய்து இருந்தான் - நிலவுலகைப் பாதுகாத்திருந்தனன்.
இருளது,
அது : பகுதிப்பொருள் விகுதி. திருவருளால் ஆணவவலி
கெடுதற்குக் கூறற்பாலவாய உவமைகளில் ஒன்றாகும் அமுத நல்விட
மொழிதல் இங்கு உவமேயமாக, அஃது உவமையாயிற்று. அவசம் -
வசமின்மை; மூர்ச்சை. மேவினார் : முற்றெச்சம். (23)
ஆகச்
செய்யுள் - 1625.
|