[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
கண்ணகன்
குடுமி மாடக் கடிபொழி லால வாயின்
அண்ணலம் பெருமை யாரே யளப்பவ ரவிர்தண் முத்த*
வெண்ணகை யுமையா ளன்பு விளைமுகச் செவ்வி போலத்
தண்ணறுங் கமலம் பூத்த தடப்பெருந் தகைமை சொல்வாம். |
(இ
- ள்.) கண் அகன் - இடம் பரந்த, குடுமி மாடம் - சிகரங்
களையுடைய மாடங்களையுடைய, கடிபொழில் - மண மிகுந்த சோலைகளாற்
சூழப்பெற்ற, ஆலவாயின் - திருவாலவாயினது, அண்ணல் அம்பெருமை -
மிகுந்த அழகிய பெருமையை, அளப்பவர் யாரே - அளவிட்டுக் கூற
வல்லவர் யாவர், அவிர்தண் முத்தம் - விளங்கிய குளிர்ந்த முத்துக்கள்
போலும், வெள் நகை உமையாள் - வெள்ளிய பற்களையுடைய
உமையம்மையாரின், அன்புவிளை - அருள் பழுத்த, முகச் செவ்விபோல -
திருமுகத்தின் அழகுபோல, தண் நறும் கமலம் பூத்த - குளிர்ந்த நறிய
தாமரை மலரப்பெற்ற, தடமபெருந் தகைமை சொல்வாம் - தீர்த்தத்தின்
பெருஞ் சிறப்பினைக் கூறுவாம் எ - று.
அகன்,
மரூஉ. அண்ணல் என்பதற்கு இங்கே கடவுளெனப் பொருள்
கூறுதல் பொருந்தாமை யறிக. அண்ணற் பெருமை - மிக்க பெருமை.
அம் : சாரியையுமாம். ஏகாரம் : எதிர்மறை. முகச்செவ்வி போலக் கமலம்
பூத்த என்றமையால் இஃது எதிர்நிலையணி. (1)
ஆற்றினுக்
கரசாங் கங்கை காவிரி யாதி யாறும்
வேற்றுரு வாய முந்நீர் வேலையும் பிறவுங் காருந்
தோற்றுமுன் றன்னை யாட்டச் சுந்தர மூர்த்தி செங்கண்
ஏற்றினன் கண்ட தீர்த்த மாகுமீ தெவ்வா றென்னில். |
(இ
- ள்.) ஈது - இப்பொற்றாமரையானது, ஆற்றினுக்கு அரசு ஆம்
- நதிகளுக்கு அரசாகிய, கங்கை காவிரி ஆதி ஆறும் - கங்கை காவிரி
முதலிய நதிகளும், வேற்று உருவு ஆய - வெவ்வேறு வடிவமாகிய, முந்நீர்
வேலையும் - மூன்று நீரையுடைய கடலும், பிறவும் - பிற நீர்நிலைகளும்,
காரும் - மேகமும், தோற்று முன் - தோன்றுவதற்கு முன்னே, தன்னை
ஆட்ட - தன்னைத் திருமஞ்சனஞ் செய்விக்க, செங்கண் ஏற்றினன் -
சிவன்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையனாகிய, சுந்தர மூர்த்தி -
சோம சுந்தரக் கடவுள், கண்ட தீர்த்தம் ஆகும் - தோற்றுவித்த தீர்த்தம்
ஆகும்; எவ்வாறு என்னில் - எப்படி என்னில் எ - று.
முந்நீர்
- ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்பன; படைத்தல்,
காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மையும் என்ப. முந்நீராகிய வேலை
யெனினும் ஆம். கண்ட - படைத்த. ஈது : சுட்டு நீண்டது. (2)
(பா
- ம்.) * அவிர்ந்த முத்த.
|