பக்கம் எண் :

மாயப்பசுவை வதைத்த படலம்169



இருபத்தொன்பதாவது மாயப் பசுவை வதைத்த படலம

[கலிநிலைத்துறை]
சுருதி யின்புறத் தவர்விடு மராவினைச் சுருதி
கருத ரும்பர னருளுடைக் கௌரியன் றுணித்த
பரிசி தங்கது பொறாதமண் படிறர்பின் விடுப்ப
வருபெ ரும்பசு விடையினான் மாய்த்ததும் பகர்வாம்.

     (இ - ள்.) சுருதியின் புறத்தவர் விடும் அராவினை - வேத நெறிக்குப்
புறம்பாகிய சமணர்கள் ஏவிய பாம்பினை, சுருதி கருது அரும் பரன் அருள்
உடைக் கௌரியன் - வேதமுஞ் சிந்தித்தற்கரிய இறைவனது திருவருளைப்
பெற்ற அனந்தகுண பாண்டியன், துணித்த பரிசு இது - துண்டு படுத்திய
திருவிளையாடல் இது; அங்கு அது பொறாது - (இனி) அங்கு அதனைப
பொறுக்காது, அமண் படிறர் - சமணராகிய வஞ்சகர், பின் விடுப்ப வரு
பெரும்பசு - பின்பு ஏவ வருகின்ற பெரிய (மாயப்) பசுவினை, விடையினால்
மாய்த்ததும் பகர்வாம் - (சோமசுந்தரக் கடவுள்) இடபத்தினால்
வதைத்தருளிய திருவிளையாடலையுங் கூறுவாம்.

     புறம் - மாறுபாடு. கௌரியன் துணித்ததும் இறைவன் புரிந்த
திருவிளையாடலேயென்பார் 'பரனரு ளுடைக் கௌரியயன் றுணித்த'
என்றார். விடையினான் என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு
இடபத்தையுடைய சோம சுந்தரக் கடவுள் என்றும், இடபத்தினால்
என்றும் உரைத்துக் கொள்க. (1)

பணப்பெ ரும்பகு வாயுடைப் பாந்தளை யனந்த
குணப்பெ ருந்தகை துணித்தபின் பின்வரு குண்டர்
தணப்ப ருங்குழாங் காலினாற் றள்ளுண்டு செல்லுங்
கணப்பெ ரும்புயல் போலுடைந் தோடின கலங்கி.

     (இ - ள்.) பணம் பெரும்பகுவாய் உடை பாந்தளை - படம் பொருந்திய பெரிய பிளந்த வாயையுடைய பாம்பினை, அனந்த குணப் பெருந்தகை
துணித்தபின் - அனந்தகுணன் என்னும் பெரிய தகுதியையுடைய பாண்டியன்
துணித்த பின்பு, பின்வரு குண்டர் தணப்பு அரும் குழாம் - பின்னே வந்த
சமணர்களின் நீங்காத கூட்டங்கள், காலினால் தள்ளுண்டு செல்லும் -
காற்றினாற் றள்ளப்பட்டு ஓடும், பெரும்புயல் கணம்போல் - பெரிய
முகிற்படலம் போல, உடைந்து கலங்கி ஓடின - இரிந்து மனம் கலங்கி
ஓடுவவாயின.

     குண்டர் குழாங்கள் புயற்கணம் போல் கலங்கியோடின என்க. (2)