கள்ளவினைப்
பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு
கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு
வினைகள் தீர்ப்பாம். |
(இ
- ள்.) உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில்,
ஊக்கம் எனும் - மனவுறுதியாகிய, தறி நிறுவி - கட்டுத் தறியை நிறுத்தி,
தள்ளரிய - பேதித்தலில்லாத, அன்பு என்னும் தொடர் - அன்பாகிய
சங்கிலியை, உறுதியாகப் பூட்டி - வலிமை பெறப்பூட்டி, இடைப்படுத்தி -
அதில் அகப்டுத்தி, தறுகண் - வன்கண்மையை யுடைய, பாசம் - ஆணவ
சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை யுடைய. பசுபோதம் -
சீவபோதம் ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து -
மகிழ்ந்து, உண்டு - அருந்தி, கருணை என்னும் - அருளாகிய, மதவெள்ளம்
பொழ - மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை - சித்திவிநாயகக்
கடவுளாகிய யானையை, நினைந்து - தியானித்து, வருவினைகள் தீர்ப்பாம் -
பிறவி தோறும் தொடர்ந்துவருகின்ற வினைகளை நீக்குவாம் எ - று.
விநாயகக்கடவுளை
வேழமென்றதற்கேற்ப உள்ளம் முதலிய வற்றைக்
கூடம் முதலியவாக உருவகப் படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம்.
கவளம் - யானை யுணவு. தொடராற் பூட்டி என விரிப்பினும் அமையும்.
ஆணவத்தாற் பசுபோதமும், அதனால் வினையும் நிகழுமென்க. பசுபோதக்
கவள மிடுதலாவது யான் எனது என்னுஞ் செருக்கற்று வணங்குதல். சித்தி
விநாயகர் : பெயர். இப்பாட்டு இயைபுருவக வணி. (14)
முருகக்
கடவுள் |
கறங்குதிரைக்
கருங்கடலுங் காரவுணப்
பெருங்கடலுங்
கலங்கக் கார்வந்
துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
பிளப்பமறை
யுணர்ந்தோ ராற்றும்
அறங்குரவு மகத்தழலு மவுணமட
வார்வயிற்றி
னழலு மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள்
சேவடிகள்
வணக்கஞ செய்வாம். |
(இ
- ள்.) கறங்கு
- ஒலிக்கின்ற, திரை - அலைகளையுடைய,
கருங்கடலும் - கரிய கடலும், கார் அவுணப் பெருங்கடலும் - கரிய அசுர
சேனையாகிய பெரிய கடலும், கலங்க - கலங்கவும், கார் வந்து உறங்கு -
முகில் வந்து படியப் பெற்ற, சிகை - உச்சியையுடைய, பொருப்பும் -
கிரவுஞ்ச மென்னும் மலையும், சூர் - சூரபன்மாவின், உரம் பொருப்பும் -
மார்பாகிய மலையும், பிளப்ப - பிளவை யடையவும், மறை உணர்ந்தோர்
ஆற்றும் - வேதவிதிகளை நன்குணர்ந்தவர்கள் செய்கின்ற, அறம் குலவும் -
அறத்தோடு கூடிய, மகத்து அழலும் - வேள்வியின்கண் தீயும், அவுண
மடவார் வயிற்றின் அழலும் - அசுரப் பெண்டிர் வயிற்றின்கண் தீயும்,
|