தம் என்று கூறப்படுவதாம்;
இனைய தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானது,
வெருவரு - அச்சம் பொருந்துகின்ற, பாவம் என்னும் விறகினுக்கு எரியாம்
- பாவ மென்கின்ற விறகுக்குத் தீயாகும் எ - று.
நான்கில்
ஒவ்வொன்றால் இப்பெயர்கள் கூறப்படு மென்க. முத்தி
தீர்த்த மென்னும் பெயர் முன்னர்ப் போந்த தெனினும் உறுதிப் பொருள்
நான்கும் பயத்தல் கூறுமுறைபற்றி ஈண்டுங் கூறினார். இருமை - பெருமை.
வெரு : முதனிலைத் தொழிற்பெயர்; வெருவுதல் வருகின்ற. தீர்த்தம் எரியாம்
என்பதின் நயங் காண்க. அன்று, ஏ : அசை. (35)
இவ்வருந் தலத்தி னான்ற பெருமையு மெரிகால் செம்பொற்
றெய்வத பதும தீர்த்தப் பெருமையுஞ் செப்பக் கேட்டோர்
எவ்வமில் போகம் வீடு பெறுவரென் றிசைத்தான் முந்நீர்ப்
வௌவமுண் டமரர் வேந்தன் பரிபவ விழுமந் தீர்த்தோன். |
(இ
- ள்.) முந்நீர்ப் பௌவம் உண்டு - மூன்று நீரையுடைய
கடலைக்குடித்து, அமரர் வேந்தன் - தேவேந்திரனுடைய, பரிபவ விழுமம்
தீர்த்தோன் - தோல்வியால் வருந் துன்பத்தை நீக்கியவனாகிய அகத்திய
முனிவன், இ அருந்தலத்தின் ஆன்ற பெருமையும் - இந்த அரிய தலத்தின்
நிறைந்த பெருமையும், எரி கால் - ஒளி வீசுகின்ற, செம்பொன் பதும
தெய்வத் தீர்த்தப் பெருமையும் - சிவன்த பொற்றாமரை யாகிய
தெய்வத்தன்மை பொருந்திய தீர்த்தத்தின் பெருமையும் ஆகிய இவைகளை,
செப்பக் கேட்டோர் - ஒருவர் சொல்லக் கேட்டவர்கள், எவ்வம் இல்
போகம் வீடு பெறுவர் என்று இசைத்தான் - துன்பமில்லாத போகத்தையும்
வீட்டையும் அடைவார்கள் என்று கூறினான் எ - று.
எரி
- நெருப்பு; ஒளிக்காயிற்று. தெய்வதம் : விரித்தல். போகமும்
வீடம் என்னும் உம்மை தொக்கன. பரிபவம் - இழிவு. விழுமம் -
துன்பம். (36)
ஆகச் செய்யுள் - 290.
|