பக்கம் எண் :

186திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



முப்பதாவது மெய்க்காட்டிட்ட படலம்

[கௌசகக்கலிப்பா]
பாவமென வடிவெடுத்த படிற்றமணர் பழித்ததழசெய்
தேவவரு மறப்பசுவை யேறுயர்த்தோன் விடைநந்திக்
காவலனை விடுத்தழித்த கதையுரைத்து மட்டாலைச்
சேவகன்மெய்க் காட்டிட்டு விளையாடுந் திறமுரைப்பாம்.

     (இ - ள்.) பாவம் என முடிவு எடுத்த படிற்று அமணர் - பாவமே
என்னும்படி வடிவந்தாங்கிய வஞ்சனையையுடைய சமணர்கள், பழித்தழல்
செய்து ஏவவரும் - பழி வேள்வி செய்து (தோற்றுவித்து) ஏவ வந்த,
மறப்பசுவை - கொலைத் தொழிலையுடைய பசுவினை, ஏறு உயர்த்தோன் -
இடபக் கொடியுயர்த்திய சோமசுந்தரக் கடவுள், விடை நந்திக் காவலனை
விடுத்து அழித்த கதை உரைத்தும் - இடபவுருவினையுடைய திரு நந்தியாகிய
காவலனை ஏவி வதைத்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்;
அட்டாலைச் சேவகன் - (இனி) அட்டாலைச் சேவகனாகிய அவ்விறைவன்,
மெய்க்காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம் - மெய்க் காட்டிட்டு
விளையாடின திருவிளையாடலைக் கூறுவோம்.

     பாவம் வடிவெடுத்தாலொத்த என மாறியுரைத்தலுமாம். தோற்றவித்து
என்னுஞ் சொல் விரிக்க. காவலன் - காத்தல் வல்லோன்; தலைவன்.
உரைத்தும் : இறந்தகால முற்று. இறைவன் அட்டாலை மண்டபத்திற்
சேவகனாய் வந்தமையை யானையெய்த படலத்திற் காண்க. அட்டாலை -
மதிலின் மேலே பரண் போலுள்ள மண்டபம். மெய்க்காட்டிட்டு -
திருமேனியைக் காட்டுதலைச் செய்து. (1)

வெவ்வியமும் மதயானை விறற்குலபூ டணன்சமணர்
அவ்வியவஞ் சனைகடந்த வனந்தகுணச் செழியன்பாற்
செவ்வியசெங் கோல்வாங்கித் திகிரிதிசை செலவுருட்டி
வவ்வியவெங் கலிதுரந்து மண்காத்து வருகின்றான்.

     (இ - ள்.) வெவ்விய மும்முத யானை விறல் குல பூடணன் - கொடிய
மும்மதங்களையுடைய யானையையுடைய வெற்றி பொருந்திய குலபூடண
வழுதி, சமணர் அவ்விய வஞ்சனை கடந்த அனந்தகுணச் செழியன் பால் -
சமணர்களது தீய வஞ்சனையைக் கடந்த அனந்தகுண பாண்டியனிடத்து,
செவ்விய செங்கோல் வாங்கி - கோடாத செங்கோலைப் பெற்று, திகிரி திசை
செல உருட்டி - ஆணையாகிய நேமியைத் திசை முழுதுஞ் செல்லுமாறு
உருட்டி, வவ்விய வெங்கலி துரந்து - உலகினைப் பற்றா நின்ற கொடிய