பக்கம் எண் :

மூர்த்திவிசேடப் படலம்187



     (இ - ள்.) அப்பதி இலிங்கம் எல்லாம் - (மகாமேரு முதலிய) -
அந்தத் திருப்பதிகளிலுள்ள இலிங்கங்கள் அனைத்தும், அருள் குறி இதனில்
- அருட்குறியாகிய இச்சிவலிங்கத்தினின்றும், பின்பு கபு விட்டு எழுந்த -
இது தோன்றியபின் கிளைத்துத் தோன்றின; இந்தக் காரணம் இரண்டினாலும்
- இந்த இரண்டு ஏதுக்களாலும், ஒப்பு அரிதான - ஒப்பில்லாத, ஞான ஒளி
திரண்டு அன்ன - ஞானவொளி திரண்டாற் போன்ற, இந்தத் திப்பிய
இலிங்கம் - இந்தத் திவ்விய இலிங்கமானது, மூல இலிங்கமாய்ச் சிறக்கும் -
மூல லிங்கமாகச் சிறந்து விளங்கும் எ - று.

     கப்பு : கவர்ப்பு என்பதன் மரூஉ. எழுந்த : அன் பெறாத பலவின்
பால் முற்று. மேற் செய்யுளிற் கூறியதனையுஞ் சேர்த்துக் காரணம்
இரண்டென்றார். திரண்டாலன்ன வென்பது விகாரமாயிற்று. மன்னும் ஓவும்
அசை. (3)

இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்* துறக்க வாணர்.

     (இ - ள்.) இந்தமா இலிங்கத்து - இந்தப் பெருமை பொருந்திய
இலிங்கத்தின்கண், எண் நான்கு இலக்கணம் - முப்பத்திரண்டு
இலக்கணங்களையுடைய, விச்சை மேனி - ஞானவடிவாகிய, அந்தம் இல்
அழகன் - முடிவில்லாத அழகினையுடைய இறைவன், பாகத்து உமையொடும்
- ஒரு பாகத்தில் உமை யம்மையோடும், அழகு செய்து - அழகினைச்
செய்து, சந்ததம் - எப்போதும், விளக்கம் செய்யும் - அருள் பாலிக்கின்ற,
தகைமையை நோக்கி - தன்மையைக் கண்டு, துறக்க வாணர் - தேவர்கள்,
சோமசுந்தரன் என்று நாமம் சாத்தினார் - சோமசுந்தரன் என்று பெயர்
கூறினார்கள் எ - று.

     புருடவுடம்பிலக்கணம் முப்பத்திரண்டென்பது கருதிக் கூறினார்.
விச்சை - ஞானம். விளக்கஞ் செய்தல் - அருளால் உலகை விளங்கச்
செய்தல். சோம சுந்தரன் - உமையுடன் கூடிய அழகினையுடையான்.
சாத்துதல் - சார்த்துதல். (4)

திறப்படு முலக மெங்கும் வியாபியாய்ச் சிறந்து நிற்கும்
அறப்பெருங் கடவுள் சோம சுந்தர னதனா லன்றோ
கறைக்கதிர் வடிவேற் றென்னன் கையிற்பொற் பிறம்பு பட்ட
பிறத்தடித் தழும்பு மூன்று புவனமும் பட்ட தன்றே.

     (இ - ள்.) திறப்படும்- பலவகையாயுள்ள, உலகம் எங்கும் -
உலகங்களனைத்தும், வியாபியாய்ச் சிறந்து நிற்கும் - வியாபியாகச் சிறந்து
நிலைபெற்ற, அறப்பெருங் கடவுள் - அறவடிவாகிய பெரிய இறைவன்,
சோம சுந்தரன் - சோமசுந்தரக் கடவுளாம்; அதனால் அன்றோ -
அதனாலல்லவா, கறை - குருதிக் கறையையுடைய, கதிர் ஒளி - பொருந்திய,
வடி - கூர்மையான, வேல் - வேற்படையையுடைய, தென்னன். கையில் -


     (பா - ம்.) * சாற்றினார்.