கலியினை ஒட்டி, மண்காத்து
வருகின்றான் - புவியினைப் பாதுகாத்து
வருகின்றான்.
அவ்வியம்
- தீமை; அழுக்காறுமாம். செவ்விய செங்கோல் - கோடாத
செங்கோல்; செங்கோல் என்பதனைப் பெயர் மாத்திரையாகக் கொள்ளலுமாம்.
வவ்விய என்பதனை நிகழ் காலமாகவுரைக்க; வெம்மை பொருந்திய
கலியென்றுமாம். (2)
சவுந்தரசா மந்தனெனத் தானைகா வலனொருவன்
சிவந்தசடை முடியண்ண லடியவரே சிவமாகக்
கவர்ந்தொழுகி யருச்சிக்குங் கடப்பாட்டி னெறிநின்றோன்
உவந்தரசற் கிருமைக்குந் துணையாகி யொழுகுநாள். |
(இ
- ள்.) சவுந்தர சாமந்தன் எனதானை காவலன் ஒருவன் - சுந்தர
சாமந்தன் என்று சேனாபதி ஒருவன் உள்ளான்; சிவந்த சடைமுடி அண்ணல்
அடியவரே - சிவந்த சடாமுடியையுடைய சிவபெருமான் அடியாரையே,
சிவமாகக் கவர்ந்து அருச்சித்து ஒழுகும் - அச் சிவபெருமானாக மனத்திற்
கொண்டு வழிபட்டொழுகும், கடப்பாட்டின் நெறி நின்றோன் - கடமை
நெறியில் நின்றவனாகிய அவன், உவந்து அரசற்கு இருமைக்கும் துணை ஆகி
ஒழுகுநாள் - விரும்பி மன்னனுக்கு இம்மைக்கும் மறுமைக்குந் துணையாக
நின்று ஒழுகு நாளில்.
சாமந்தன்
- படைத் தலைவன், சவுந்தர சாமந்தன் : சிறப்புப் பெயர்.
ஒருவன் உளன் எனவும், நின்றோனாகிய அவன் எனவும் விரிக்க. கவர்ந்து -
உளங் கொண்டு. அருச்சித்து ஒழுகும் என மாறுக. உவந்து துணையாகி என
இயையும். (3)
வல்வேடர்க் கதிபதியாய் வருசேதி ராயனெனும்
வில்வேட னொருவனவன் விறல்வலியான் மேலிட்டுப்
பல்வேறு பரிமான்றேர்ப் பஞ்சவன்மேற் படையெடுத்துச்
செல்வேனென் றுறவலித்தான் றென்னர்பிரா னஃதறிந்தான். |
(இ
- ள்.) வல் வேடர்க்கு அதி பதியாய் வரு - வலிய வேடர்களுக்குத் தலைவனாயிருந்து
வருகின்ற, சேதிராயன் எனும் வில் வேடன் ஒருவன் -
சேதிராயன் என்னும் வில்லையுடைய வேடன் ஒருவன் உளன்; அவன் விறல்
வலியால் மேலிட்டு - அவன் வெற்றியின் வலியினால் மேம்பட்டு, பல் வேறு
பரிமான் தேர்ப் பஞ்சவன் மேல் - பல வேறு வகைப்பட்ட குதிரைகளையும்
தேர்களையுமுடைய பாண்டியன் மேல், படை எடுத்துச் செல்வேன் என்று உற
வலித்தான் - படையெடுத்துப் போருக்குச் செல்லுவேன் என்று உறுதியாகக்
கருதினான்; தென்னர் பிரான் அஃது அறிந்தான் - பாண்டியர் தலைவனாகிய
குலபூடணன் அதனை அறிந்தான்.
சேதிராயன்
- சேதி நாட்டுக்கு அரையன். சேதிநாடு - திருமுனைப்
பாடிநாடு :
"சேதிநன் னாட்டுநீடு
திருக்கோவ லூரின் மன்னி" |
|