பக்கம் எண் :

190திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தருமங்களுள், சிவ தரும் மிகும் - சிவதரும் உயர்ந்தது; இன்மை சால்
நெறி நின்றோர்க்கு - இல்லறமாகிய சிறந்த நெறியில் நின்ற வருக்கு, ஏற்கும்
- ஏற்றற் குரிய,நலன்கள் தம்மில் - நல்ல பாத்திரங்களுள், முக்கண்
நாதனுக்கு அன்பு பூண்டோரே - மூன்று கண்களையுடைய இறைவனுக்கு
அன்பு பூண்டவரே, நன்மை சான்றவர் - நன்மை மிக்கவராவர் எ - று.

     மின்மை, இன்மை என்பவற்றில் மை : பகுதிப் பொருள் விகுதி.
சிந்தாமணி - சிந்தித்தவற்றைத் தரும் மணி.என்ப : அசை. நின்றோருக்கு :
வேற்றுமை மயக்கம். பாத்திரம் என்பதனாற் கலம் என்றார். ஏகாரம்
பிரித்துக் கூட்டப்பட்டது. (10)

தீயவாங சுவைப்*பா லாவிற் றேவரா வதிகம் பல்வே
றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்
மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந்
தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்.

     (இ - ள்.) தீயவாம் - இனிமையாகிய, சுவைப்பால் ஆவில்-
சுவையையுடைய பாலையுடைய பசுக்களுள், தேவர் ஆ அதிகம் - காமதேனு
உயர்ந்தது; பல்வேறு ஆய - பல வேறு வகையாகிய, மா தீர்த்தம் தம்முள்
- பெருமை பொருந்திய தீர்த்தங்களுள், சுவண கஞ்சம் அதிகம் ஆம் -
பொற்றாமரை சிறந்தது; (அவைபோல), மாயம் மாசு அறுக் - பந்தமாகிய
குற்றத்தை நீக்குதற் பொருட்டு, எல்லாத் தலத்திலும் - எல்லாப் பதிகளினும்,
மன்னி வதியும் - நிலைபெற்று வீற்றிருக்கும், தூய வானவரில் - தூய
சிவலிங்க மூர்த்திகளுள், சோமசுந்தரன் சிறந்தோன் ஆகும் - சோம சுந்தரக்
கடவுள் சிறந்தவனாவான் எ - று.

     தீய என்பது பண்பு மாத்திரையாய் நின்றது. அவாம் தீ சுவை எனப்
புரித்துக் கூட்டி. விரும்பும் இனிய சுவை யென்றலுமொன்று. வதிந்து மன்னும்
- மன்னி வதியும் என மாற்றப்பட்டுள்ளது. 'பொருப்பினுட் டலைமை
யெய்தும் பொன்னெடுங் குடுமி மேரு' என்பது முதலாகக் கூறப்பட்டவற்றை
யெல்லாம் உவமையாக நிறுத்தி ஒப்புமைக் கூட்ட வுவமையாக்குக. (11)

அந்தமு முதலு மில்லா வகண்டபூ ரணமா யார்க்கும்
பந்தமும் வீடு நல்கும் பராபரச் சோதி தானே
வந்தனை புரிவோர்க் கிம்மை மறுமைவீ டளிப்பா னிந்தச்
சுந்தர விலிங்கத் தென்றும் விளங்குவான் சுருதி யேத்த.

     (இ - ள்.) அந்தமும் முதலும் இல்லா - முடிவும் முதலுமில்லாமல்,
அகண்ட பூரணமாய் - அகண்ட நிறைவாகி, யார்க்கும் பந்தமும் விடும்
நல்கும் - எவருக்கும் பந்தத்தையும் முத்தியையுங் கொடுத்தருளுகின்ற,
பராபரச் சோதி - சிவபெருமான். வந்தனை புரிவோர்க்கு - வணங்கு
வோர்களுக்கு, இம்மை மறுமை வீடு அளிப்பான் - இகபரப் பயன்களையும்
வீடுபேற்றையும் அருளும் பொருட்டு, இந்தச் சுந்தர இலிங்கத்து - இந்த


     (பா - ம்.) * தீயவான்சுவை.