அழகிய இலிங்கத்தின்கண்;
சுருதி ஏத்த - மறைகள் துதிக்க, என்றும்
விளங்குவான் - எப்போதும் வீற்றிருப்பான் எ - று.
இல்லா
: ஈறு கெட்ட எதிர்மறை வினை யெச்சம்; பெயரெச்ச
மறையுமாம். தான், ஏ : அசை. (12)
இத்தகு சயம்பு
தன்னை யேனைய சயம்பு வெல்லாம்
நித்தமுந் தரிசித் தேகு நிருமல வொளியா மிந்த
உத்தம விலிங்கங் கண்டோ ருரையுணர் வொடுங்க வுள்ளே
சித்தமா சொழியயத் தோன்றுஞ் சிவபரஞ் சுடரைக் கண்டோர். |
(இ
- ள்.) இத்தகு சயம்புதன்னை - இந்தச் சயம்பு மூர்த்தியை,
ஏனைய சயம்பு எல்லாம் - மற்றைய சயம்பு மூர்த்திகள் அனைத்தும்,
நித்தமும் தரிசித்து ஏகும் - நாள்தோறும் வந்து தரிசித்துச் செல்லா நிற்கும்;
நிருமல ஒளி ஆம் - நின்மல ஒளிப் பிழம்பாகிய, இந்த உத்தம இலிங்கம்
கண்டோர் - இந்த உத்தமமான சிவலிங்கத்தைத் தரிசித்தோர், சித்தம் மாசு
ஒழிய - மனக்குற்றம் ஒழிதலால், உரை உணர்வு ஒடுங்க - வாக்கும் மன
ஒடுங்க, உள்ளே தோன்றும் - அகத்தே தோன்றியருளுகின்ற, சிவபரஞ்
சுடரைக் கண்டோர் - பரஞ்சோதியாகிய சிவத்தைத் தரிசித்தவராவர்
எ - று.
சயம்பு
- சுயம்பு. வடசொல்லாகலின் உயிர்வர உகரங்கெடாது நின்றது.
உள்ளே கண்ட பயனெய்துவர்; காண்பர் என்றுமாம். (13)
இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ மெல்லாங்
கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள
மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு நோய்போல்
உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல். |
(இ
- ள்.) இத் தனிச் சுடரை - இந்த ஒப்பற்ற ஒளிவடிவாகிய
சிவலிங்கத்தை, நேர் கண்டு இறைஞ்சினோர் - நேரே காணப்பெற்று
வணங்கியவர்களுடைய, பாவம் எல்லாம் - பாவங்கள் அனைத்தும், கொத்து
- திரண்ட, அழல் பொறி அழிவது போலவும், கோபம் - சினம் மிகுக்க,
மெய்த்தவம் சிதையுமாபோல் - உண்மைத் தனம் அழியுந் தன்மைபோலவும்,
மருந்தினால் வீயும் நோய் போல் - மருந்தினால் நோய் அழிதல் போலவும்,
உத்தம குணங்கள் எல்லாம் - சிறந்த குணங்களனைத்தும், உலோபத்தால்
அழியுமாபோல் - உலாபத் தன்மையால் அழியுந் தன்மைபோலவும் எ - று.
பஞ்சு
அழிதல்போல், நோய் வீதல்போல் என்க. சிதையுமா, அழியுமா
என்பன விகாரம்.
"உளப்பரும் பிணிப்புறா வுலோப மொன்றுமே
அளப்பருங் குணங்களை யழிக்கு மாறுபோல்" |
என்பர் கம்பநாடரும்.
(14)
|