முன்னவன் - எல்லாத்
தேவர்களுக்கும் முன்னவனாகிய, சமட்டி
விச்சாபுரம் உறை முதல்வன் தன்னை - சமட்டி விச்சாபுரமென்னும்
மதுரைப்பதியில் எழுந்தருளியுள்ள முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுளை,
சொன்ன இக்காலந்தோறும் - மேற் கூறிய இக்காலங்கள் தோறும்,
இறைஞ்சியும் - நிலத்திற் றாழ்ந்து வணங்கியும், தொழுதும் - கைகூப்பிக்
கும்பிட்டும், சூழ்ந்தும் - வலம் வந்தும், பொன் அடிக்கு - அழகிய
திருவடிகளுக்கு, அன்பர் ஆகி வழிபடும் புனித சீலர் - அன்பினை
யுடையாராகி வழிபாடு செய்கின்ற தூய ஒழுக்கத்தையுடையார் எ - று.
சமட்டி
விச்சாபுரம் என்பதனைத் தலவிசேடத்துட் காண்க. புனித
சீலர் என்பது வரும்பாட்டில் வாழ்வார் என்பதனோடு முடியும். (19)
உம்மையில் வினைக ளென்னும் பிணியவிழ்ந் தொருவித் தூய
செம்மைய ராகி யானத் திருவொடு செல்வ மோங்க
வெம்மையில் போக மூழ்கி மலவிருள் வீக்க நீந்தி
மைம்மலி கண்டத் தெங்கோண் மலரடி நீழல் வாழ்வார். |
(இ
- ள்.) உம்மையில் - முற்பிறப்புக்களிற் செய்த, வினைகள்
என்னும் பிணி - வினைகளாகிய கட்டானது, அவிழ்ந்து ஒருவி - அவிழ்ந்து
நீங்கப் பெற்று, தூய செம்மையர் ஆகி - தூய வாய்மையை யுடையவராய்,
ஆனாத் திருவொடு - நீங்காத அருட் செல்வத்தோடு, செல்வம் ஓங்க -
ஏனைச் செல்வங்களும் மிக, வெம்மைஇல் போகம் மூழ்கி - தட்பமாகிய
போகத்தில் அழுந்தி நுகர்ந்து, மல இருள் வீக்கம் நீந்தி - ஆணவ
இருளாகிய பெருக்கினைக் கடந்து, மை மலி கண்டத்து எங்கோன் -
கருமை மிகுந்த திருமிடற்றையுடைய எம் இறைவனுடைய மலர் அடி நீழல்
வாழ்வார் - மலர்போன்ற திருவடி நீழலை யடைந்து வாழ்வார்கள் எ - று.
அவிழ்ந்து
என்றமையால் பிணி என்பதற்குக் கட்டு என்றும், நீந்தி
என்றமையால் வீக்கம் என்பதற்கு பெருக்கு என்றும் பொருள் கூறப்பட்டன.
செம்மை - நடுவுநிலைமை, வாய்மை. மலமாகிய இருள் வீக்கம் என்றும்,
இருளினது வீக்கம் என்றும் விரித்தலுமாம். (20)
[க்ஷ வேறு]
|
அறவுருவ னாலவா
யானாமஞ்
செவிமடுத்தா லடைந்த பத்துப்
பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும்
பவப்பாவப் பிணிபோங் கூடல்
இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுந்து
மனைப்புறம்போந் தாலீரைஞ் ஞூறு
மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல்
வினையனைத்து மாயு மன்னோ. |
(இ
- ள்.) அற
உருவன் ஆலவாயான் - தரும வடிவினனாகிய
திருவாலவாய்க் கடவுளின், நாமம் செவிமடுத்தால் - பெயரைச் செவியிற்
|