பக்கம் எண் :

196திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மங்கலமா கியமுகம னீரெட்டும்
     வழுவாது வாசந் தோய்ந்த
செங்கனக மணிக்கலசப் புனலாட்டி
     மாபூசை செய்தோ ராவார்.

     (இ - ள்.) அங்கை அளவு ஆகிய நல்நீர் ஆட்டி - உள்ளங்கையில
டங்கும் அளவினையுடையதாகிய நல்ல நீரால் திருமஞ்சனம் செய்து,
பூசித்தோர் - பூசித்தவர்கள், ஏனை அளவு இல் துக்க தலத்து உறை -
மற்றைய அளவிறந்த உயர்ந்த பதிகளில் எழுந்தருளிய, இலிங்க மூர்த்திகளை
- சிவலிங்க மூர்த்திகளை, சிவாகமநூல் சொன்ன ஆற்றால் - சிவாகமம்
கூறிய வழியால், மங்கலம் ஆகிய முகமன் ஈரெட்டும் வழுவாது -
மங்கலமான சோடச உபசாரங்களும் தவறாமல், செங்கனக மணிக்கலசம் -
சிவந்த பொன்னாற் செய்த இரத்தினங்கள் பதித்த கலசத்தில் நிறைந்த,
வாசம் தோய்ந்த புனல் ஆட்டி - மணம் அளாவிய நீரால் அபிடேகித்து,
மாபூசை செய்தோர் ஆவார் - பெரிய பூசை செய்தவர்கள் ஆவார்கள்
எ - று.

     சோடச வுபசாரங்களாவன : ஆவாகனம், தாபனம், சந்நிதானம்,
சந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனீயம்,
அர்க்கியம், புட்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பானீயம்,
ஆராத்திரிகை, ஜபசமர்ப்பணை என்பன. (23)

அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத
     மானுதவு மைந்து தீந்தேன்
செவ்வண்ணக் கனிசாந்தச் சேறுமுதன்
     மட்டித்துத் தேவர் தேறா
மெய்வண்ணங் குளிரவிரைப் புனலாட்டி
     மாபூசை விதியாற் செய்தோர்
மைவண்ண வினைநீந்தி யறமுதனாற்
     பொருளடைந்து மன்னி வாழ்வார்.

     (இ - ள்.) அவ்வண்ணம் சுந்தரனை - அவ்வாகமத்திற் கூறிய
வண்ணம் சோமசுந்தரக் கடவுளை, ஐந்து அமுதம் - பஞ்சாமிர்தமும், ஆன்
உதவும் ஐந்து - பசுக்களால் அளிக்கப்பெற்ற பஞ்ச கவ்வியமும், தீந்தேன் -
மதுரமாகிய தேனும் செவ் வண்ணக்கனி - சிவந்த நிறத்தை யுடைய
பழங்களும், சாந்தச்சேறு முதன் மட்டித்து - சந்தனக் குழம்பும் முதலியவற்றை
அப்பி, தேவர்தேறா மெய்வண்ணம் குளிர - தேவர்களும் அறியாத அழகிய
திருமேனி குளிருமாறு, விரைப்புனல் ஆட்டி - மணமுடைய நீரால்
அபிடேகித்து, மாபூசை விதியால் செய்தோர் - பெரிய பூசையை விதிப்படி
செய்தவர்கள், மைவண்ண வினை நீந்தி - கரிய தீவினைக் கடலைக் கடந்து
- அறமுதல் நாற்பொருள் அடைந்து - அறமுதலிய நான்கு பயனையும்
பெற்று, மன்னி வாழ்வார் - நிலைபெற்று வாழ்வார்கள் எ - று.

     அமுதம் ஐந்து : பால், நெய், தேன், சருக்கரை, பழம்; பால்நீக்கித்
தேங்காய்த் திருகல் கூட்டி ஐந்தென்று கொள்ளுதலும்; அதனையும்