பக்கம் எண் :

மூர்த்திவிசேடப் படலம்197



நீக்கி நீர்கூட்டி ஐந் தென்றலும்; பழவர்க்கம் ஒன்று, நெய் தயிர்பால்
என்பன ஒன்று, இவற்றுடன் தேன், சருக்கரை, நீர்கூட்டி ஐந்தென்றலும்;
உண்டு. ஆன் உதவும் ஐந்து : பால், தயில், நெய், கோமயம், கோசலம்,
கோரோசனமும் கூட்டிக் கவ்வியம் ஆளெனவும் கூறுதலுண்டென்பர்.
மைவண்ணம் என்றது இலக்கணை வழக்கு. தேவரும் என்னும் உம்மை
தொக்கது. (24)

நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும்
     வடித்தவிரை நன்னீ ராட்ட
வல்லவர்நூ றாயிரயமா மேதமகப்
     பயன்பெறுவர் வாச நானம்
எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு
     மட்டித்தோ ரெழிலார் தெய்வ
முல்லைநகை யாரோடும் விரைக்கலவை
     குளித்தின்ப மூழ்கி வாழ்வார்.

     (இ - ள்.) நல்லவகை முகமன் ஈர் எட்டு உள்ளும் - நல்ல
வகையாயுள்ள சோடச உபசாரங்களுள்ளும், வடித்த விரை நல்நீர் ஆட்ட
வல்லவர் - வடித்த மணமுள்ள நல்லநீரால் திருமஞ்சனம் செய்ய
வல்லவர்கள், நூறு ஆயிரயம் மாமேத மகப் பயயன் பெறுவர் - நூறாயிரம்
பரிவேள்வியாகிய யாகத்தைச் செய்தலால் வரும்பயனை - அடைவர்; வாசம்
நானம் - மணம்பொருந்திய கத்தூரியும், எல் அவிர் - ஒளி விளங்குகின்ற,
குங்குமம் - குங்குமப்பூவும், சாந்தம் - சந்தனமுமாகிய, இவை பலவும்
மட்டித்தோர் - இவை பலவற்றையும்சாத்தினோர்கள், எழில் ஆர் - அழகு
நிறைந்த, தெய்வமுல்லை நகையாரோடும் - தெய்வப் பெண்களாகிய முல்லை
யரும்புபோலும் பற்களையுடையவர்களோடும், விரைக்கலவை குளித்து -
மணம் பொருந்திய கலவையைப் பூசி, இன்பம் மூழ்கி வாழ்வார் -
இன்பக்கடலுள் திளைத்து வாழ்வார்கள் எ - று.

     விரை நன்னீர் - பனிநீருமாம். தெய்வமுல்லை நகையார் என்பதனை
விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம். (25)

நன்மலரொன் றாலவா யான்முடிமேற்
     சாத்தினா னயந்து நூறு
பொன்மலர்கொண் டயற்பதியிற் பூசித்த
     பயனெய்தும் புனித போகத்
தன்மைதரு சுந்தரற்குத் தூபமொரு
     காற்கொடுப்போர் தமக்குத் தாங்கள்
சொன்மனமெய் யுறச்செய்த குற்றமா
     யிரம்பொ றுப்பன் சுருதி நாதன்.

     (இ - ள்.) ஆலவாயயான் முடிமேல் - திருவாலவாயான் திருமுடி
மேல், நல் மலர் ஒன்று சாத்தினால் - நல்ல மலர் ஒன்றைச் சாத்தினால்,