பக்கம் எண் :

2திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்பவாகலினென்க. உயர்தல் - கண்வளர்தல்; பீடத்திலுள்ள சிறந்த மால்
எனினுமாம். இசைபாடு மென்பதற் கேற்பச் சோலைகள் சூழ்ந்த என
வருவிக்கப்பட்டது; பாடும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது.
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றமெறிந்த முருகவேளம்
அமரமுனிவனாகிய அகத்தியனும் என்றிவர் முதலாயினோரால்
ஆராயப்பெற்றதும் திருந்திய இயல்வரம் புடையதும் ஆம் என்பார்
‘ஆருந்தமிழால்’ என்றார்; அருமை - பிற வற்றிற்கில்லாத சிறப்பு. அறுகால்
- அறுகோடு; ஆல் ஒடுவின் பொருட்டாயிற்று. அமரர்கள் சோமசுந்தரக்
கடவுளை வணங்குதற்கு வந்து மெய்த்திருக்கும் பீடமென்க. அமுதை
அரங்கேற்றுதல் - அமிழ்தத்தைத் தேவர் கூட்டம் உண்ணச் செய்தல்.
முனிவன் அரங்கேற்றுதலாவது தான் பாடிய புராணத்தை அரங்கின்கண்
உள்ள புலவர்களுக்குக் கூறி, அவர்கள் ஏற்கும்படி செய்தல். இது
தொன்றுதொட்ட வழக்கமென்பது தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்
பாண்டிய னவையத்து அரங்கேறியதென்பதனால் அறியலாகும். இச்செய்யுளில்
ஆக்கியோன் பெயர், நுதலிய பொருள், களன் முதலியவை கூறப்பட்டிருத்தல்
காண்க. இதனை இயற்றினார் இந்நூலாசிரியர்க்கு ஒருசாலை மாணாக்கர்
முதலாயினாருள் ஒருவராதல் வேண்டும். ஏ : ஈற்றசை.