பக்கம் எண் :

மூர்த்திவிசேடப் படலம்203



     (இ - ள்.) மான்மத சந்தரன் - மான்மத சுந்தரன் என்றும், கொடிய
பழி அஞ்சு சந்தரன் - கொடுமையான பழியஞ்சிய சுந்தரன் என்றும், ஓர்
மருங்கில் - ஒரு பக்கத்தில், ஞானத்தேன் மருவி உறை சோமசுந்தரன் -
உமையம்மையார் விரும்பி உறைகின்ற சோமசுந்தரன் என்றும், தேன் -
வண்டுகள், செவ்வழி யாழ் செய்ய - செவ்வழிப் பண்ணைப் பாட, பூத்த -
மலர்ந்த, கான் மருவு - மணம் பொருந்திய, தடம் பொழில் சூழ் - பெரிய
சோலைகள் சூழ்ந்த, ஆலவாய்ச் சுந்தரன் - ஆலவாய்ச் சுந்தரன் என்றும்,
மீன் கணங்கள் சூழ - உடுத் தொகுதிகள் சூழ, பால்மதி சூழ் - வெள்ளி
சந்திரன் வலம் வருகின்ற, நான் மாடக் கூடல் நாயகன் - நான் மாடக்
கூடனாயகன் என்றும், மதுராபதிக்கு வேந்தன் - மதுராபதி வேந்தன்
என்றும் எ - று.

     கொடிய : பழிக்கு அடை. ஞானவுருவாகிய தேன்; உமாதேவி யார்.
தேன் செவ்வழியாழ செய்ய - வண்டு செவ்வழிப் பண் பாட; செவ்வழி.
நெய்தற் பண். தடமும் பொழிலும் சூழ்ந்த என்றுமாம். (34)

சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா
     புரநாதன் சீவன் முத்தி
புரநாதன் பூவுலக சிவலோகா
     திபன்கன்னி புரேசன் யார்க்கும்
வரநாளுந் தருமூல மாடக் கூடல்
     விவைமுதலா மாடக் கூடல்
அரனாம மின்னமளப் பிலவாகு
     முலகுய்ய வவ்வி லிங்கம்.

     (இ - ள்.) சிரம் நாலோன் - நான்கு தலைகளையுடைய பிரமன்,
பரவு அரிய - வணங்குதற்கரிய, சமட்டி விச்சாபுர நாதன் - சமட்டி
விச்சாபுர நாதன் என்றும், சீவன் முத்திபுரநாதன் - சீவன் முத்திபுர நாதன்
என்றும், பூ உலக சிவலோகாதிபன் - பூலோக சிவலோகாதிபன் என்றும்.
கன்னி புரேசன் - கன்னி புரேசன் என்றும், யார்க்கும் - எவருக்கும்,
நாளும் - எப்போதும், வரம்தரு - வரம் தருகின்ற, மூல இலிங்கம் என -
மூலலிங்கமென்றும், இவை முதலா - இவை முதலாக, மாடக் கூடல் அரன்
நாமம் - நான்மாடக் கூடலில் எழுந்தருளி யிருக்கும் சோமசுந்தரக்
கடவுளின் திருப்பெயர்கள், இன்னம்அளப்பு இல ஆகும் - இன்னும்
அளவிறந்தனவாம்; அ இலிங்கம் உலகு உய்ய அந்த இலிங்கமானது
உலகத்தார் உய்திகூடுதற் பொருட்டு எ-று.

     அவ்விலிங்கம் என்பது வரும் பாட்டில் முளைத்தெழுந்தது என்பது
கொண்டு முடியும். (35)

பாதாள மேழுருவ முளைத்தெழுந்த
     தவ்விலிங்கப் படிவந் தன்னுள்
ஆதார மாகவமர்ந் தறுபத்து
     நாலுவிளை யாடல் செய்த
போதானந் தன்பெருமை நங்குரவன்
     மொழிப்படியே புகன்றோ மென்றான்
வேதாதி கலைதெரிந்த மலயமுனி
     கேட்டறவோர் வினாதல் செய்வார்,