உணர்ந்த சங்கப்
புலவர்கட்குச் சங்கப் பலகை அருளிச் செய்ததும்,
தருமிக்குப்பாடிச் செம்பொன் தந்ததுவும் - தருமிக்குப் பாடிக் கொடுத்து
சிவந்த பொன்முடிப்பைக் கொடுப்பித்தருளியதும், மாறு படு கீரற்கு -
(தன்னோடு) மாறுகொண்ட நக்கீரனுக்கு, கரை ஏற்றம் தந்தவாறும் -
கரையேறுதலை அளித்த தன்மையும், விந்தம் அடக்கிய முனியால் -
விந்தமலையை அடக்கிய அகத்திய முனிவனால், கீரன் இயல் தமிழ்
தெளிய விடுத்தவாறும் - அவன் இலக்கணம் அறிந்து கொள்ளும்படி
ஏவியருளிய தன்மையும் எ - று.
செம்பியன்
- விக்கிரமசோழன். செந்தமிழோர் - ககிலர் பரணர்
நக்கீரர் முதலாயினார்; பொய்யடிமை யில்லாத புலவர். இயல் -
இலக்கணம். கொங்குதேர் வாழக்கை என்னும் செந்தமிழ்ப்பாவினைப்
பாடி. பொற்றாமரையினின்றும் கரையேற்றுவித்தது. இயற்றமிழ் - தமிழ்
இயல்; தமிழிலக்கணம். கீரற்கு என்பதை உருவு மயக்கமாகக் கொண்டு,
கீரனைக்கரையேற்றிய என்னலுமாம். (12)
ஊமனாற் புலவரிக லகற்றியது
மிடைக்காட னுடன்போய்க் கொன்றைத்
தாமனார் வடவால வாயமர்ந்த
பரிசும்வலை சலதி வீசிப்
பூமனாய் குழலியைவேட் டருளியதும்
வாதவூர்ப் புனிதர்க் கேறத்
தேமனாண் மலரடிகண் முடிசூட்டி
யுபதேசஞ் செய்த வாறும். |
(இ
- ள்.) ஊமனால் புலவர் இகல் அகற்றியதும் - மூங்கை யாகிய
உருத்திரசன்மரால் சங்கப் புலவர்கள் மாறுபாட்டைப்போக்கி யருளியதும்,
கொன்றைத் தாமனார் - கொன்றை மாலையை அணிந்த சோமசுந்தரக்
கடவுள், இடைக்காடனுடன் போய் - இடைக்காடனோடு சென்று, வட
ஆலவாய் அமர்ந்த பரிசும் - வட மதுரையின்கண் தங்கிய தன்மையும்,
சலதி வலைவீசி - கடலில் வலையை வீசி, பூமன் ஆய் குழலியை வேட்டு
அருளியதும் - மலர்கள் பொருந்திய ஆய்ந்து வகிர்ந்த கூந்தரையுடைய
உமையம்மையை மணந்தருளியதும், வாதவூர் புனிதர்க்கு - திருவாத
வூரின்கண் தோன்றியருளிய தூயவருக்கு, ஏற - (அவர்) வீடுபேற்றை
அடைய, தேம் மன் நாள் மலர் அடிகள் முடிசூட்டி உபதேசம் செய்தவாறும்
- தேன் பொருந்திய அன்றலர்ந்த மலர் போலுந் திருவடிகளை (அவர்)
முடியின்கண் சூட்டி உபதேசித் தருளிய தன்மையும் எ - று.
ஊமை
- முருகக்கடவுளின் அமிசமாய் வைசியர் மரபில் உதித்து
மூங்கைப் பிள்ளையாயிருந்த உருத்திரன்மர். வடவாலவாய் - மதுரைக்கு
வடக்கிலும் வையை நதிக்குத் தெற்கிலுமுள்ள வடமதுரை. வாதவூர்ப் புனிதர்
- திருவாதவூரடிகள்; மாணிக்க வாசகர். (13)
நரிகள்பரி யாக்கியதும் பரிகணரி
யாக்கியது நாகம் பூண்டோன்
அரியதிரு மேனியின்மே லடிசுமந்து
மண்சுமந்த வருளுந் தென்னன் |
|