(இ
- ள்.) மட்டு அலம்பு கோதையார் முன் - தேன் ததும்பு - மாலையை யணிந்த
மகளிர் முன்னே, வளைபகர்ந்த வணிகர் தாமம் வளையல் விற்ற வணிகரானவர், பட்டுஇசைந்த
அல்குல் நங்கை பாகர் ஆகும் என வியந்து - பட்டாடை பொருந்திய அல்குகலையுடைய உமா
தேவியை ஒரு பாகத்திலுடைய இறைவராவார் என்று வியப்புற்று உள் ததும்பும் உவகை வெள்ளம்
உற்று எழுந்த குமிழிபோல் - உள்ளத்திற் றதும்பிய மகிழ்ச்சி வெள்ளத்திற் பொருந்தி
யெழுந்த குமிழி போல, கண்ததும்பு புனலில் ஆழ்ந்து - கண்களிலே ததும்புகின்ற நீரில்
அமிழ்ந்து நகர் எல்லாம் களி அடைந்த - நகரிலுள்ளா ரனைவரும் களிப்புற்றனர்.
அலம்புதல்
- ஈண்டுத் ததும்புதல். அல்குல் - அரை;
என்பது தேவாரம்.
குமிழிபோலத் ததும்புகின்ற புனல் என்க. அடைந்த : அன்பெறாத முற்று, நகரிலுள்ளார்
அனைவரும் களிப்படைந்தார் என்பதனை நகரெலாம் களியடைந்த என்றார். (34)
உருவி லாளி யுடல் பொடித்த வொருவர் கூட லிருவரான்
மருவி லார்தி ருக்கை தொட்டு வளைசெ றித் நீர்மையாற்
கருவின் மாத ராகி நாய்கர் கன்னி மார்கண் மின்னுவேற்
பொருவில் காளை யெனவ ரம்பில் புதல்வ ரைப்ப யந்தனர். |
(இ
- ள்.) உருவிலாளி உடல் பொடித்த ஒருவர் - மன்மதனுடைய
உடலை நீறாக்கிய ஒருவரும், கூடல் இருவரால் மருவிலார் - திருமாலும்
அயனுமாகிய இருவராலும் அடையப் படாத கூடல் நாயகருமாகிர்
சோமசுந்தரக்கடவுள், திருக்கை தொட்டு வளைசெறித்த நீர்மையால் - தமது
திருக்கையாலே தொட்டு வளையல் இட்ட தன்மையால், நாயகர் கன்னிமார்கள் - வணிக மங்கையர்கள்,
கருவின் மாதராகி - கருவுற்ற மகளிராகி, மின்னுவேல்
பொருவு இல் காளை என - ஒளி விடுகின்ற வேலினையுடைய ஒப்பில்லாத
காளையாகிய முருகவேளைப் போல. வரம்பு இல் புதல்வரைப் பயந்தனர் -
அளவில்லாத மைந்தர்களைப் பெற்றார்கள்.
உருவிலாளி
- உருவின்மையை ஆள்பவன்; அனங்கன்; ஈண்டு மதனன்
என்னும் பெயர் மாத்திரையாக நின்றது. இறைவர் காமவயத்தராய்
அம்மகளிரைப் பரிசித்தாரல்லர் என்பது தோன்ற உருவிலாளியுடல் பொடித்த
வொருவர் என்றார்.
மருவு
- அடையப்படுதல். வளை செறித்த நீர்மையால் என்னும்
ஏதுவைக் கருவின் மாதரானமைக்கும், வேற்காளை யெனப் புதல்வரைப்
பயந்தமைக்கும் தனித்தனி கொள்க. (35)
பிறந்த மைந்த ரளவி றந்த பெருமை கொண்ட பெருமிதஞ்
சிறந்த வீர மாாற்ற லேற்ற திறல்பு னைந்து வைகினார்
மறந்த தும்பு வேனெ டுங்கண் வணிக மாதர் சிறிதுநாள்
துறந் தரன்ற னருள டைந்து துணைய டிக்கண் வைகினார். |
|