(இ
- ள்.) பிறந்த மைந்தர் (அங்ஙனம்) தோன்றிய புதல்வர்கள்,
அளவு இறந்த பெருமை கொண்ட பெருமிதம் - அளவற்ற பெருமை
கொண்ட களிப்பும், சிறந்த வீரம் - மிக்க வீரமும், ஆற்றல் - வலிமையும்,
ஏற்ற திறல் - தக்க வெற்றியும் (ஆகிய இவற்றை), புனைந்து வைகினார் -
அணிகலமாகச் சூடி வாழ்ந்தனர்; மறம் ததும்பு வேல் நெடுங்கண்
வணிகமாதர் - கொலை மிக்க வேல்போலும் நீண்ட விழிகளையுடைய
வணிக மகளிர், சிறிது நாள் துறந்து - சின்னாட் கழித்து, அரன் தன் அருள்
அடைந்து - சிவபெருமானது திருவருளப் பெற்று, துணை அடிக்கண்
வைகினார் - அவருடைய இரு திருவடிக்கண்ணும் கலந்து தங்கினார்கள்.
பெருமிதம்
ஈண்டுக் களிப்பினை யுணர்த்திற்று. பெருமைகொண்ட,
பெருமிதஞ் சிறந்த, வீரம் ஆற்றல் ஏற்ற எனப் பிரித்துத் திறலுக்கு
அடையாக்கித் தனித்தனி கூட்டி யுரைத்தலுமாம். சிறிது நாள் - சின்னாள்.
(36)
ஆகச்செய்யுள்
- 1759.
|