பக்கம் எண் :

அட்டமாசித்தி யுபதேசித்த படலம்237



     (இ - ள்.) அலர் பசும் பொலம் கொம்பு அன்ன அணங்கு இவள் -
மலர்ந்த பசிய பொற்கொம்பு போன்ற இவ்வுமை நங்கை, நிறைவால் -
பூரணத்தன்மையால், எங்கும் மலர் பராசத்தி ஆகி - எஙகும் வியாபித்த
பராசத்தி யாகியும், மகேசை ஆய் - மகேச்சுவரி எனப் பெறுவாளாகியும்,
அணிமா ஆதி - அணிமா முதலிய, பலர் புகழ் சித்தி எட்டும் - பலரும்
புகழ்கின்ற எட்டுச் சித்திகளும், பணிந்து குற்றேவல் செய்யும் சிலதிய ராகி -
வணங்கிக் குற்றேவல் புரியும் சேடியராகி, சூழ்ந்து சேவகம் செய்ய - சூழ்ந்து
நின்று பணிசெய்யா நிற்க, வைகும் - வீற்றிருப்பாள்.

     நிறைவு - பூரணம். மலர்தல் - பரத்தல், வியாபித்தல். பராசத்தி,
மகேசை என்னும் சத்திகளாய் நிற்பவள் இவ்வுமையே என்றார்;

"சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி யுமைதிரு வாணி யாகி
வைத்துறுஞ் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சித்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றா னீச னத்திற மவளு நிற்பள்"

என்று சிவஞானசித்தியார் கூறுதல் காண்க. (7)

இவளைநீர் சிந்தித் தான்முன் னீட்டிய வினையை நீக்கித்
தவலருஞ் சித்தி யெட்டுந் தருமெனக் கருணை பூத்துச்
சிவபரஞ் சோதி யெட்டுச் சித்தியுந் தெளித்தல் செய்தான்
அவரது மறந்தா ரும்மை யாழ்வினை வலத்தான் மன்னோ.

     (இ - ள்.) இவளை நீர் சிந்தித்தால் - இப்பிராட்டியை நீவிர் சிந்திப்
பீராயின், முன் ஈட்டிய வினையை நீக்கி - முற்பிறப்புக்களிலே செய்து
தொகுத்த வினையைப் போக்கி, தவல் அரும் சித்தி எட்டும் தரும் என
கெடுதலில்லாத எட்டுச் சித்திகளையும் தந்தருளுவாளென்றுஇ கருணை பூத்து - அருள் புரிந்து, சிவபரஞ்சோதி எட்டுச் சித்தியும் தெளித்தல் செய்தான் -
சிவபரஞசுடர் எட்டுச் சித்திகளையுந் தெளிவித்தருளினான்; அவர் உம்மை
ஆழ்வினை வலத்தால் அது மறந்தார் - அம்மகளிர் பிரா ரத்த வினையின்
வலியால் அதனை மறந்தனர்.

     அது மறந்தார் என்பதற்கு உமையைச் சிந்தியாமல் அச்சித்தியை
மறந்தார் என்க. உம்மை யென்றது ஈண்டு முற்பிறப்புக்களை. ஆழ்வினை -
ஆழமாகிய வினை, மன்னும் ஓவும் அசைகள். (8)

செழுமதிப் பிளவு வேய்ந்த தேவுமக் குற்ற நோக்கி
முழுமதி முகத்தி னாரை முனிந்துநீர் பட்ட மங்கைப்
பழுமர முதலஞ் ஞானப் பாறையாய்க் கிடமி னென்னக்
கழுமலுற் றவர்தாழ்ந் தென்று கழிவதிச் சாப மென்றார்.

     (இ - ள்.) செழுமதிப் பிளவு வேய்ந்த தேவும் - செழுமையாகிய
மதியின் பிளவினை அணிந்த இறைவனும், அக்குற்றம் நோக்கி - அப்
பிழையை நோக்கி, முழுமதி முகததினாரை முனிந்து - நிறைமதி போன்ற