பக்கம் எண் :

242திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஐம்பத்தொன்பதாவது நரி பரியாக்கிய படலம்

         [அறுசீரடியாசிரிய விருத்தம்.]
அரிகணை தொடுத்து வேழ மட்டவன் செழியன் வாயிற்
றெரிகலை யமைச்ச ரேற்றைத் தேசிக வடிவத் தீண்டி
வரிகழல் சூட்டி யாண்ட வண்ணமிவ் வண்ண மையன்
நரிகளைப் பரிக ளாக்கி நடத்திய வாறுஞ் சொல்வாம்.

     (இ - ள்.) அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் - நரசிங்க
பாணத்தை விடுத்து (சமணர் ஏவிய) யானையை அழித்த சோமசுந்தரக்
கடவுள், செழியன் வாயில் தெரிகலை அமைச்சர் ஏற்றை - பாண்டியன்
வாயிலிலுள்ள கலைகளை ஆராய்ந்த அமைச்சருள் ஆண் சிங்கம்
போல்வாராகிய வாதவூரடிகளை, தேசிக வடிவத்துஈண்டி - குருவடிவத்துடன்
வந்து, வரிகழல் சூட்டி ஆண்டவண்ணம் இவ் வண்ணம் - (வீரகண்டையைக்)
கட்டிய திருவடியை அவர் முடியிற் சூட்டி ஆட் கொண்டருளிய
திருவிளையாடல் இது, ஐயன் - அச்சோமசுந்தரக்கடவுள், நரிகளைப் பரிகள்
ஆக்கி நடத்தியவாறும் சொல்வாம் - நரிகளைக் குதிரைகளாக்கி
நடத்தியருளிய திருவிளையாடலையும் (இனிக்) கூறுவாம்.

     அரிக்கணை எனற்பாலது எதுகை நோக்கி இயல்பாயிற்று. வடிவத்து -
வடிவத்துடன். கழல், ஆகுபெயர். (1)

சுற்றமாம் பாச நீவித் துகளறுத் திருந்தார் தம்மை
மற்றைநா ளழைத்து வேந்தன் வந்தில போலு மின்னங்
கொற்றவாம் பரிக ளென்னக் குறுமதி முடித்தா னன்பர்
இற்றைநாண் முதனாண் மூன்றி லீண்டுவ விறைவ வென்னா.

     (இ - ள்.) சுற்றமாம் பாசம் நீவி - சுற்றமாகிய பாசத்தைத் துடைத்து,
துகள் அறுத்து இருந்தார் தம்மை - ஆணவமலத்தை அறுத்துச்
சிவயோகத்திலிருந்த அவ்வாத வூரடிகளை, வேந்தன் மற்றை நாள் அழைத்து
- அரி மருத்தன பாண்டியன் மறுநாள் தன்னிடம் அழைத்து,
கொற்றவாம்பரிகள் இன்னம் வந்தில போலும் என்ன - வெற்றியை யுடைய
தாவுங் குதிரைகள் இன்னும் வந்திலபோலு மென்று வினவ, குறுமதி
முடித்தான் அன்பர் - பிறை மதியினை முடித்த இறைவன் அடியாராகிய
மணிவாசகனார், இறைவ - மன்னனே, இற்றை நாள் முதல் நாள் மூன்றில் -
இன்று முதுல் மூன்று நாட்களுள், ஈண்டுவ - வருவனவாகும்; என்னா -
என்று கூறி.