பக்கம் எண் :

246திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     தேவு எனப் பிரித்தலுமாம். சிவன் தேவ தேவனாதலை,

"தேவதேவன் சிவன்பெருந் தன்மையே"

என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தா லறிக.

"இவளைநீர் சிந்தித் தால்முன் னீட்டிய வினையை நீக்கித்
தவலருஞ் சித்தி யெட்டுந் தரும்"

என முன்பு சிவபெருமான் அருளிச்செய்தமையால் உமையின் பாவனை
வலத்தால் நன்கு பயின்றா ரென்க. இங்ஙனம் பட்டமங்கையில் அட்ட
மாசித்தி உபதேசித்த வரலாறு,

"பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி யருளிய வதுவும்"

எனத் திருவாசகத்திற் குறிப்பிடப்பெற்றது. (29)

                     ஆகச் செய்யுள் - 1788