பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்247



சுந்தர விடங்க ரன்பர் சூழ்துய ரகற்ற நேரே
வந்தெழு காட்சி போல வந்தது செக்கர் வானம்
இந்தவர் மார்பந் தூங்கு மேனவெண் கோடு போன்ற
தந்தர வுடுக்க ளெல்லா மயன்றலை மாலை யொத்த.

     (இ - ள்.) சுந்தர விடங்கர் - சோமசுந்தரக்கடவுளாகிய
பேரழகுடையார், அன்பர் சூழ்துயர் அகற்ற - அன்பரின் சூழ்ந்த துன்பத்தை
அகற்றுதற்கு, நேரே வந்து எழுகாட்சிபோல - நேரே வந்து எழுந்த தோற்றம்
போன்று, செக்கர் வானம் வந்தது - செவ்வானம் வந்தது; இந்து - மதியானது,
அவர் மார்பம் தூங்கும் - அவரது திருமார்பின்கண் கிடந்து அசையும்,
ஏனவெண் கோடு போன்றது - பன்றியினது வெள்ளிய கொம்பினை ஒத்தது;
அந்தர உடுக்கள் எல்லாம் - வானின கண் உள்ள நாண்மீன்களனைத்தும்,
அயன் தலை மாலை ஒத்த - பிரமனது தலை மாலையை ஒத்தன.

     இச்செய்யுள் மாலையுவமை யணியின் பாற்படும் (11)

சுழிபடு பிறவுத் துன்பத் தொடுகட லழுவத் தாழ்ந்து
கழிபடு தனையுங் காப்பான் கண்ணுதன் மூர்த்தி பாதம்
வழிபடு மவரைத் தேரான்* வன்சிறைப் படுத்த தென்னன்
பழிபடு புகழ்போ லெங்கும் பரந்தது கங்கு லீட்டம்.

     (இ - ள்.) சுழிபடு பிறவித்துன்பத் தொடு கடல் அழுவத்து ஆழ்ந்து
- சுழி பொருந்திய பிறவித்துன்பமாகிய கடற்பரப்பின் கண் அழுந்தி,
கழிபடுதனையும் காப்பான் - கொன்னே கழிகின்ற தன்னையும்
ஓம்புதற்பொருட்டு, கண்ணுதல் மூர்த்தி பாதம் வழிபடும் அவரை -
நெற்றிக்கண்ணையுடைய இறைவன் திருவடியை வழிபடும் அவ்வடிகளை,
தேரான் - அறியாதவனாய், வன்சிறைப்படுத்த தென்னன் - வலிய
சிறைப்படுத்திய பாண்டியனது, பழிபடு புகழ்போல் - பழிபட்ட புகழ பரந்தது
போல, கங்குல் ஈட்டம் எங்கும் பரந்தது - செறிந்த இருள் எங்கும் பரவியது.

     சுழிபடு, தொடு என்பன கடலுக்கு இயற்கை யடைகள். தனை -
அரசனை. காப்பான், வினையெச்சம். அவரது பெருமையைத் தேரான் என்க.
இது தற்குறிப்பின் பாற்படும். (12)

கங்குல்வந் திறுத்த லோடுங் கருஞ்சிறை யறையிற் போக்கிச்
சங்கிலி நிகளம் பூட்டித் தவத்தினைச் சிறையிட் டென்னச்
செங்கனல் சிதற நோக்குஞ் சினங்கெழு காவ லாளர்
மங்குலி னிருண்ட கண்டர் தொண்டரை மறுக்கஞ் செய்தார்.

     (இ - ள்.) கங்குல் வந்து இறுத்தலோடும் - இருள் வந்து
நிலைபெற்றவளவில், கருஞ்சிறை அறையில் போக்கி - பெரிய சிறைச்
சாலையிற் புகுத்தி, தவத்தினைச் சிறையிட்டென்ன - தவத்தினை


     (பா - ம்.) * தேறான்.