பொருந்திய காஞ்சி
நகரில், கடிகொள் பைங்காடு வெட்டிய காரணக்குறி -
(கண்டோர்க்கு) அச்சம் விளைத்தலைக் கொண்ட பசிய காடுகளை வெட்டிய
காரணக் குறியினானே, காடு வெட்டிய சோழன் என்று - காடு வெட்டிய
சோழனென்று பெயர் கூறப்பட்டு, ஏடு எட்டிய வண்டு சூழ்பொழில்
எயில்கொள் கச்சியுளான் - இதழ்கள் பொருந்திய வண்டுகள் மொய்க்கும்
சோலைகளை யுடைய மதிலையுடைய காஞ்சிநகரி லுள்ளான் ஒருவன்;
அவன் - அம்மன்னன்.
மாநகரைச்
சூழவென்க. கடி - மணமுமாம். ஏடுவெட்டிய வண்டு -
இதழினைக் கிண்டிய வண்டு என்றுமாம். சிவபெருமான் உமையின் தனக்குறி
யணிந்த வரலாற்றைக் காஞ்சிப் புராணம் - தழுவக் குழைந்த படலத்திலும்,
திருத்தொண்டர் புராணம் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும் காண்க.
(2)
உடதத மச்சிவ பத்த ரிற்பெரி துத்த மன்புது விரைகலன்
மித்தை யென்றுவெ ணீறு கண்டிகை யார மென்றணி மெய்யினான்
நித்த வேத புராண மாதி நிகழ்த்தி டும்பொருள் கண்ணுதல்
அத்த னேபர தத்து வப்பொரு ளென்ற ளந்தறி கேள்வியான். |
(இ
- ள்.) உத்தம சிவபத்தரில் பெரிது உத்தமன் - உத்தமமாகிய
சிவபத்தியுடைய அடியாருள் மிகவும் உத்தமன்; புது விரைகலன் மித்தை
என்று - புதிய மணமுடைய சந்தனமும் அணிகலனும் அழியும் பொருளென்று
கருதி, வெள் நீறு கண்டிகை - வெள்ளிய திருநீறும் உருத்திராக்க மாலையமே,
ஆரம் என்று மெய்யினான் - சந்தனமும் முத்தாரமு மென்று அணிந்த
மேனியை யுடையவன்; நித்த வேதம் புராணம் ஆதி - அழியாத மறைகளும்
புராணங்களும் முதலிய நூல்கள், நிகழ்த்திடும் பொருள் கண்நுதல் அத்தனே -
கூறும பொருள் நுதற்கண்ணை யுடையராகிய சிவபெருமானே; பரதத்துவப்
பொருள் என்று அளந்து அறி கேள்வியான் - (ஆகலின் அவனே) உண்மைப்
பொருள் என்று அளந்தறிந்த கேள்வியை யுடையவன்.
மித்தை
- பொய்; ஈண்டு அநித்த மென்னும் பொருட்டு. அவற்றால்
விளையும் இன்பம் நிலையற்ற தென்றபடி. ஆரம் என்பது இரட்டுற
மொழிதலாற் சந்தனத்தையும் முத்தையும் உணர்த்திற்று. வெண்நீறு சாந்தமும்,
கண்டிகை முத்து வடமும் எனக் கொள்க. அளந்தறி - வேதம் முதலிய
அளவைகளால் அளந்தறிந்த. (3)
அங்க மாறொடு வேத நான்கு மறிந்து மெய்ப்பொரு ளாய்ந்துளஞ்
சங்கை கொண்டனு தினம ரன்புகழ் சாற்றி சைவபு ராணநூல்
பொங்கு மின்சுவை யமுது தன்செவி வாய்தி றந்து புகட்டியுண்*
டெங்க ணாயக னடியி ணைக்க ணிருத்து மன்பு கருத்துளான். |
(இ
- ள்.) அங்கம் ஆறொடு வேதம் நான்கும் அறிந்து - இங்ஙனம்
ஆறு அங்கங்களையும் நான்கு மறைகளையும் கற்று, மெய்ப்பொருள் ஆய்ந்து
- உண்மைப்பொருளை ஆராய்ந்து துணிந்து, உளம் சங்கை கொண்டு -
உள்ளத்தால் (அப்பொருளைச்) சிந்தித்தல் செய்து, அனுதினம் -
|