பக்கம் எண் :

விடையிலச்சினையிட்ட படலம்249



எப்பொழுதும், அரன் புகழ் சாற்று - சிவபெருமான் புகழைக் கூறுகின்ற,
சைவ புராண நூல் - சிவ புராண நூல்களாகிய, பொங்கும் இன் சுவை
இமுது - மிக்க இனிய சுவையோடு கூடிய அமுதினை, தன் செவிவாய் திறந்து
- தனது செவியாகிய வாயினைத் திறந்து, புகட்டி உண்டு - (பெரியோர்) ஊட்ட உண்டு, எங்கள் நாயகன் அடி இணைக்கண் - எங்கள் பெருமானாகிய
அவ்விறைவனுடைய இரு திருவடியின் கண்ணும், இருத்தும் அன்பு
கருத்துளான் - பதிய வைத்த அன்பு மிக்க மனத்தினையுடையவன்.

     அங்கம ஆறு - சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம்,
சோதிடம் என்பன; இவை வேதத்திற்கு உறுப்புக்கள் போறலின் அங்கம்
எனப்படும்; இவற்றின் இயல்பு முன் உரைக்கப்பெற்றமை காண்க. சங்கை -
ஈண்டுச் சிந்தித்தல் என்னும் பொருட்டு. புகட்டி - ஊட்டப்பெற்று. (4)

முக்க ணாயகன் முப்பு ரத்தை முனிந்த நாயகன் மங்கையோர்
பக்க நாயகன் மிக்க வானவர் பரவு நாயக னரவணிச்
சொக்க* நாயக னாட லுஞ்செவி யான்மு கந்து சுவைதருந்+
தக்க பாலொடு தேன்க லந்து தருக்கி யுண்பவ னாயினான்.

     (இ - ள்.) முக்கண் நாயகன் - மூன்று கண்களையுடைய இறைவனும்,
முப்புரத்தை முனிந்த நாயகன் - திரிபுரங்களை எரித்தருளிய இறைவனும்,
மங்கை ஓர்பக்க நாயகன் - உமையை ஒரு கூற்றில் வைத்த இறைவனும்,
மிக்க வானவர் பரவும் நாயகன் - சிறந்த தேவர்கள் வழிபடும்
இறைவனுமாகிய, அரவு அணிச்சொக்க நாயகன் ஆடலும் - பாம்பாகிய
அணியினையுடைய சொக்கலிங்க மூர்த்தியின் திருவிளையாடலையும்,
செவியால் முகந்து - செவியினால் மொண்டு, சுவை தரும் தக்க பாலொடு
தேன் கலந்து - சுவையினைத் தருகின்ற சிறந்த பாலுந்தேனுங் கலந்து,
தருக்கி உண்பவன் ஆயினான் - உண்டு களிப்பானாயினன்.

     ஒரு பொருள்மேற் பல பெயர் வந்தன. அரவணி சொக்கநாயகன் என
இயல்பாயின் வினைத் தொகையாகும். சைவ புராணங்களுடன் சோமசுந்தரக்
கடவுளின திருவிளையாடலைக் கேட்டலைப் பாலுந் தேனும் கலந்துண்பதாகக்
கூறினார். உண்டு தருக்குபவனாயினான் எனப் பிரித்துக் கூட்டுக. (5)

அங்க யற்கண் மடந்தை பாக னடித்த லந்தொழு மாசைமேற்
பொங்கி மிக்கெழு மன்ப னாய்மது ரேசன் மின்னு பொலங்கழற்
பங்கய யப்பத மென்று நான்பணி வேனெ னப்பரி வெய்தியே
கங்கு லிற்றுயில் வான்க யற்புரை கண்ணி பங்கனை யுன்னியே.

     (இ - ள்.) அங்கயற்கண் மடந்தை பாகன் - அங்கயற்கண்ணம்மையை
ஒரு பாகத்திலுடைய சோமசுந்தரக்கடவுளின், அடித்தலம் தொழும் ஆசைமேல் பொங்கி மிக்கு எழும் அன்பனாய் - திருவடிகளை (க் கண்டு)


     (பா - ம்.) * அரவணி சொக்க. +சுவைத்தருந்.