பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்249



பந்தம் நான் மறையின் ஆர்ப்பும் - பந்தமமைந்த நான்கு வேதங்களின்
ஒலியுமாகிய இவற்றை, செவிகள் ஆரப் பருகினார் - செவிகள் நிறையுமாறு
அடிகள் பருகினார்.

     உணர்த்துவான், வினை யெச்சம். திருப்பள்ளி யெழுச்சியின் பொருட்டுத்
தொண்டர் சூழ என்க. சூழ்ந்து நின்று வந்தனை செய்யும் என்றுமாம். மங்கல
சங்கம் - வலம்புரிச் சங்கம். பந்தம் - தளை. (15)

போதவா னந்தச் சோதி புனிதமெய்த் தொண்டர்க் காக
நாதமா முரச மார்ப்ப நரிப்பரி வயவர் சூழ
வேதவாம் பரிமேற் கொண்டு வீதியில் வரவு காணுங்
காதலான் போலத் தேர்மேற் கதிரவ னுதயஞ் செய்தான்.

     (இ - ள்.) போத ஆனந்தச் சோதி - ஞானானந்த ஒளிப்பிழம் பாகிய
இறைவன், புனித மெய்த தொண்டர்க்காக - தூய உண்மைத் தொண்டராகிய
மாணிக்க வாசகர் பொருட்டு, நாதமாம் முரசம் ஆர்ப்ப - நாத தத்துவமாகிய
முரசு ஒலிக்கவும், நரிப்பரி வயவர் சூழ - நரியாகிய குதிரையின் வீரர்
சூழவும், வேதவாம் பரிமேற் கொண்டு - வேதமாகிய தாவுங் குதிரைமேல்
ஏறி யருளி, வீதியில் வரவு காணும் காதலான் போல - வீதியின் கண்
வருதலைக் காணும் விருப்புடையவன் போல, கதிரவன் தேர்மேல் உதயம்
செய்தான் - சூரியன் தேரின் மேல் ஏறி உதயமாயினன்.

     இறைவற்கு முரசம் நாததத்துவ மென்பதனை,

"மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்"

"வேத மொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
நாதப் பறையின ரன்னே யென்னும்"

என வரும் திருவாசகத் திருப்பாடல்களானறிக. இது தற்குறிப் பேற்றவணி.
(16)

கயனெடுங் கண்ணி யோடுங் கட்டவிழ் கடிப்பூஞ் சேக்கைத்
துயிலுணர்ந் திருந்த சோம சுந்தரக் கருணை வெள்ளம்
பயினெடுஞ் சிகர நோக்கிப் பங்கயச் செங்கை கூப்பி
நயனபங் கயநீர் சோர நாதனைப் பாட லுற்றார்.

     (இ - ள்.) கட்டு அவிழ் கடிப்பூஞ் சேக்கை - முறுக்கு அவிழ்ந்த
மணம் பொருந்திய மலரமளியினின்றும், கயல் நெடுங் கண்ணியோடும் -
கயல் போலும் நீண்ட கண்ணையுடைய பிராட்டியோடும், துயில்
உணர்ந்திருந்த துயில் நீங்கி யிருந்த சோமசுந்தரக் கருணை வெள்ளம் பயில்
- சோமசுந்தரராகிய அருள் வெள்ளம் எழுந்தருளிய, நெடுஞ்சிகரம் நோக்கி
- நீண்ட விமானத்தை நோக்கி, பங்கயச் செங்கை கூப்பி - தாமரை மலர்