பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்251



தேவாய் - தேவாதி தேவனாகியும், திருவாலவாய் உறையும் -
திருவாலவாயின்கண் எழுந்தருளிய, ஆவார் கொடியாய் - நீண்ட இடபக்
கொடியை யுடையவனே, அடியேற்கு இரங்காயோ - அடியேனாகிய எனக்கு
இரங்கியருளாயோ.

     தேவாதி தேவன் - தேவர்கட்கு ஆதியாகிய தேவன். ஆய் என்னும்
செய் தெனெச்சங்கள் உறையும் என்னும் பெய ரெச்ச வினை கொண்டன.
ஆ - ஈண்டு இடபம். ஆர் கொடி எனப் பிரித்துப் பொருந்திய கொடி
என்னலுமாம். (19)

முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப்
பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்த்
தென்னா மதுரைத் திருவால வாயுறையும்
என்னா யகனே யெளியேற் கிரங்காயோ.

     (இ - ள்.) முன்னாம் முது பொருட்கும் முன்னாம் முது பொருளாய் -
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய், பின்னாம்
புதுமைக்கும் பின்னாகும் பேர் ஒளியாய் - பின்னைப் புதுமைக்கும்
பின்னாகும் பெரிய ஒளிவடிவாய், தென் ஆம் மதுரைத் திருவாலவாய்
உறையும் என் நாயகனே - தெற்கின் கண் உள்ளதாகிய மதுரை என்னுந்
திருவாலவாயின்கண் எழுந்தருளிய எனது நாயகனே, எளியேற்கு இரங்காயோ
- எளியேனாகிய எனக்கு இரங்கி யருளாயோ.

     இச்செய்யுளின் முன்னிரண்டடிகள்

"முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"

என்னும் திருவாசக வடிகளைத் தழுவி வந்தன. தென் - அழகு என்றுமாம்.
(20)

மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி
விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகிப்
பண்ணா யிசையாய்ப் பனுவலா யெங்கண்ணுங்
கண்ணானா யென்னுறுகண் காணாவா றென்கொலோ.

     (இ - ள்.) மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி - நிலனாகியும்
நீராகியும் நெருப்பாகியும், காற்றாகியும், விண்ணாய் இருசுடராய் -
வானாகியும் இரண்டு சுடர்களாகியும், இத்தனையும் வேறாகி - இத்தனைக்கும்
வேறாகியும், பண்ணாய் இசையாய்ப் பனுவலாய் - பண்ணாகியும்
இசையாகியும் பாட்டாகியும், எங்கண்ணும் கண் ஆனாய் - எவ்விடத்தும்
கண்ணாகியும் நின்றவனே, என் உறுகண் காணாவாறு என்கொலோ - எனது
துன்பத்தை நீ காணாதவாறு என்னையோ (அறியேன்).