பூட்டியருட் பாசமிரு பாதம் பொறித்துடலிற்
கூட்டி யடியாரு ளகப்படுத்தாட் கொண்டருமை
காட்டியவோ வின்றென்னைக் கைவிட்டாய் வெய்யரெனை
ஆட்டி யொறுக்குமிடத் தாரேன்று கொள்வாரே. |
(இ
- ள்.) அருள்பாசம் பூட்டி - அருளாகிய பாசத்தாற் பிணித்து,
உடலில் இருபாதம் பொறித்து - முடியின்கண் இரண்டு திருவடிகளையும்
பொறித்து, அடியாருள் கூட்டி அகப்படுத்து - அடியாருள் ஒருவனாகக்கூட்டி
அகப்படுத்தி, ஆட்கொண்டு அருமை காட்டியவோ - ஆட்கொண்டு
நிதருமையைக் காட்டியவனே, இன்று என்னைக் கைவிட்டாய் - இப்பொழுது
அடியேனைக்கைவிட்டனை; வெய்யர் -கொடிய இத்தண்டலாளர், எனை
ஆட்டி ஒறுக்குமிடத்து - என்னைத் துன்புறுத்தித் தண்டிக்குங் காலத்து,
என்று கொள்வார் ஆர் - தாங்குபவர் யாவர்.
உடல்
தலைக்கு ஆகுபெயர்.
"விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின்
மிகுகாத லடியார்தம் மடிய னாக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டா னமுத மூறி
யகநெகவே புகுந்தாண்டா னன்பு கூர |
என அடிகள் திருவாசகத்தில்
அருளிச்செய்தல் இங்கே சிந்திக்கற்பாலது.
(23)
ஊரா ருனைச்சிரிப்ப தோராயென் றுன்னடிமைக்
காரா யடியே னயர்வே னஃதறிந்தும்
வாரா யரசன் றமரிழைக்கும் வன்கண்ணோய்
பாராயுன் றன்மை யிதுவோ பரமேட்டி. |
(இ
- ள்.) ஊரார் உனைச்சிரிப்பது ஓராய் என்று - ஊரிலுள்ளார்
உன்னை எள்ளி நகையாடுதலை அறியாமலிருக்கின்றாய் என்று கருதி, உன்
அடிமைக்கு ஆராய் - உன் அடிமைக்கு ஆராகியோ (அடியார் போன்று),
அடியேன் அயர்வேன் - அடியேன் அயர்கின்றேன்; அஃது அறிந்தும்
வாராய் - அதனை நீ அறிந்து வைத்தும் வந்தருளினாயல்லை; அரசன் தமர்
இழைக்கும் வன்கண் நோய் பாராய் - மன்னனுடைய ஏவலாளர் செய்யுங்
கொடிய துன்பத்தினைப் பார்த்தருளினாயல்லை; பரமேட்டி உன் தன்மை
இதுவோ - பரமேட்டியே உனது தன்மை இதுவோ.
"ஏசா நிற்ப ரென்னையுனக் கடியா
னென்று பிறரெல்லாம்
பேசா நிற்ப ரியான்றானும் பேணா நிற்பே னின்னருளே" |
"தெருளார் கூட்டம் காட்டாயேற்
செத்தே போனாற் சிரியாரோ" |
என்னும் திருவாசகப்பகுதிகள் இங்கே சிந்திக்கற்பாலன.
உன் கருணை
யிருந்தவா றிதுவோ என்றார். பரமேட்டி - பரமன். (24)
|