வட்டத் தோல்வரி புறங்கிட்ந் தசையவை வடிவாள்
தொட்ட கையினர் சிலர்நெடுந் தோமரஞ் சுழல
விட்ட கையினர் சிலர்வெரி னிடைநெடு விசிகப்
புட்டில் வீக்கிவிற் றூக்கிய புயத்தினர் சிலரால். |
(இ
- ள்.) (அவருள்) வட்டத்தோல் - வட்டமாகிய பரிசை, வரிபுறம்
கிடந்து அசைய - (கவசம்) வரிந்த முதுகிற் கிடந்து அசைய, வைவடிவாள்
தொட்ட கையினர் சிலர் - கூரிய வடித்த வாட்படையினைத் தொட்ட
கையினை யுடையார் சிலர்; நெடுந்தோமரம் சுழல விட்ட கையினர் சிலர்
-நீண்ட தண்டத்தைச் சுழல விட்ட கையினை யுடையார் சிலர்; வெரின் இடை
நெடுவிசிகப் புட்டில் வீக்கி - முதுகினிடத்து நீண்ட அம்புக் கூட்டினைக்
கட்டி, வில்தூக்கிய புயத்தினர் சிலர் - வில்லைத் தொங்கவிட்ட
தோளையுடையார் சிலர்.
விசிகம்
- அம்பு. புட்டில் - தூணி. (30)
செம்ப டாஞ்செய்த போர்வையர் சிலர்பசும்* படத்தான்
மொய்ம்பு வீக்கிய கவயத்தர் சிலர்கரு முகில்போல்
அம்பு யம்புதை காப்பினர் சிற்சில ரவிரும்
பைம்பொன் வாணிறப் படாஞ்செய்குப் பாயத்தர் சிலரால். |
(இ
- ள்.) செம்படாம் செய்த போர்வையர் சிலர் - சிவந்த ஆடையாற்
செய்த போர்வையினை யுடையார் சிலர்; பசும் படத்தால் மொய்ம்பு வீக்கிய
கவயத்தர் சிலர் - பசிய ஆடையால் தோளில் இறுகக்கட்டிய கவசமுடையார்
சிலர்; கருமுகில் போல் - கரியமேகம் போல, அம்புயம்புதை காப்பினர்
சிற்சிலர் - அழகிய தோளை மறைத்த (நீல ஆடையாற் செய்த)
கவசமுடையார் சிலர்; அவிரும் பைம் பொன்வாள் நிறப்படாம் செய்
குப்பாயத்தர் சிலர் - விளங்கா நின்ற பசிய பொன் போலும் ஒள்ளிய
நிறத்தினையுடைய ஆடையாற் செய்த சட்டையுடையார் சிலர். படாம் -
ஆடை. குப்பாயம் - சட்டை. (31)
பிச்ச வொண்குடை யார்பலர் கவரிவால் பிறங்கத்
தைச்ச தண்குடை யார்பலர் சல்லிசூழ் நாற்றி
வைச்ச வண்குடை யார்பலர் வாணிலா முத்தம்
மொய்ச்ச வெண்குடை யார்பலர் மொய்ம்பின ரிவருள். |
(இ
- ள்.) பிச்ச ஒண்குடையார் பலர் - பீலிக்குஞ்சங் கட்டிய ஒள்ளிய
குடையினை யுடையார் பலர்; கவரிவால் - கவரிமாவின் வாலால், பிறங்க -
விளங்க, தைச்ச தண்குடையார் பலர் - தைத்த தண்ணிய குடையினை
யுடையார் பலர்; சல்லி சூழ் நாற்றி வைச்சவண் குடையார் பலர் -
சல்லிகளைச் சூழத் தொங்கவிட்டு வைத்த வளப்பமிக்க குடையினை
(பா
- ம்.) * சிலர்சிலர்.
|