பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்259



     (இ - ள்.) வான நாயகன் - (அங்ஙனம் ஏறியருளிய) தேவர்
பெருமானாகிய சோமசுந்தரக்கடவுள், ஆன மந்திரக் கிழார் பொருட்டு
அன்றியும் - அமைச்சுரிமையுடையரான வாதவூரடிகள் பொருட்டல்லாமலும்,
வென்றி மீனவன் பிறப்பு அறுக்கவும் - வெற்றியையுடைய அரிமருத்தன
பாண்டியன் பிறப்பினை அறுக்கும் பொருட்டும், வார்கழல் வீக்கி ஏந்திய -
நீண்ட வீரகண்டையைக் கட்டித்திருக்கரத் திலேந்திய, மறை உறை கழித்த
ஞனவாள் - வேதமாகிய உறையினின்றும் கழித்த ஞானமாகிய வாள்,
புறஇருளையும் நக்கி வாள் எறிப்ப - அகவிருளையே அன்றிப்
புறவிருளையும் போக்கி ஒளி வீசவும்.

     பகையறுக்கலுறுவார் வீரக்கழலணிந்து வாளேந்துமாறே இறைவனும்
அடியாரின் பிறவியாகிய பகையை அறுக்கக் கழலணிந்து
வாளேந்தினனென்றார். இறைவற்கு ஞானமே வாளாதலை,

"ஞானவா ளேந்துமையர் நாதப் பறையறைமின்"

என்னும் திருவாசகத்தாலறிக. புறவிருளையும், உம்மை எச்சப்பொருட்டு. (37)

சாய்ந்த கொண்டையுந் திருமுடிச் சாத்தும்வாள் வைரம்
வேய்ந்த கண்டியுந் தொடிகளுங் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும்வெண் கலிங்கமுங் காப்பும்
ஆய்ந்த தொண்டர்த மகம்பிரி யாதழ கெறிப்ப.

     (இ - ள்.) சாய்ந்த கொண்டையும் - ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும்,
திருமுடிச்சாத்தும் - திருமுடிப்பாகையும், வாள்வைரம் வேய்ந்த கண்டியும் -
ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிககளும், தொடிகளும் குழைகளும் -
வீரவளைகளும் குண்டலங்களும், வினையைக் காய்ந்த புண்டரநுதலும் -
வினைகளைச் சினந்து போக்கும் திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த
திருநுதலும், வெண்கலிங்கமும் காப்பும் - வெள்ளிய ஆடையும் கவசமும்,
ஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரியாது அழகு எறிப்ப - (மெய்ப்பொருளை)
ஆராய்ந்தறிந்த தொண்டர்களின் மனத்தினின்றும் நீங்காது அழகினை
வீசவும்.

     திருமுடிச்சாத்து - தலைப்பாகை. குதிரைச் சேவகனானமைக் கேற்பச்
சாய்ந்த கொண்டையும், திருமுடிச்சாத்தும் முதலியன உடையனானானென்க.
(38)

பிறக்கு மாசையோர் மறந்துமிங் கணுகன்மின் பிறப்பை
மறக்கு மாசையோ ரிம்மென வம்மினன் பரைவேந்
தொறுக்கு நோய்களை வானென வொருவனும் பிறவி
அறுக்க வந்தன னென்பபோற் பரிச்சிலம் பலம்ப.

     (இ - ள்.) பிறக்கும் ஆசையோர் மறந்தும் இங்கு அணுகன்மின் -
பிறக்கும் விருப்புடையவர்கள் மறந்தேயும் இங்கு வாராதீர்கள்; பிறப்பை
மறக்கும் ஆசையோர் - பிறப்பினைப் போக்கும் விருப்புடையவர், இம்மென