2.
வெள்ளையானைச் சாபந்தீர்த்த படலம்
|
[கொச்சகக்கலிப்பா]
|
மட்டவிழுங்
கொன்றைச் சடையான் மகவானைத்
தொட்ட பழியின் றொடக்கறுத்த வாறீது*
பட்டமத வேழம் பரனைப் பராய்முனிவன்
இட்டகொடுஞ் சாபநீத் தேகியவா றோதுவாம். |
(இ
- ள்.) மட்டு அவிழும் கொன்றைச் சடையான் மணத்தொடு
மலர்ந்த கொன்றை மலர் மாலையை யணிந்த சடையையுடைய இறைவன்,
மகவானைத் தொட்ட பழியின் தொடக்கு அறுத்தவாறு ஈது - இந்திரனைப்
பற்றிய பழயின்கட்டினை அறுத்த தன்மை இதுவாகும்; படட மத வேழம் -
(இனி) நெற்றிப் பட்டத்தினையும் மதப்பெருக்கினையுமுடைய வெள்ளை
யானையானது, பரனை - அச்சோமசுந்தரக் கடவுளை - பராய் வழிபட்டு,
முனிவன் இட்ட - துருவாச முனிவனால் இடப்பட்ட, கொடும் சாபம் நீத்து
ஏகியவாறு ஓதுவாம் - கொடிய சாபத்தினை நீக்கிச் சென்ற
திருவிளையாடலைக் கூறுவாம் எ - று.
மட்டு
அவிழும் - மணம் விரியும் என விரித்தலுமாம்; மட்டு -
தேனுமாம். அவிழும் மலர் எனச் சினையோடியையும். ஈதென்றது முற்கூறிய
வதனை : சுட்டு நீண்டது. பராவி என்பது பராய் எனத் திரிந்தது. இது
கூறினாம் இது கூறுவாம் என இங்ஙனமாகத்தொகுத்துச் சுட்டுவது ஆன்றோர்
வழக்கமென்பதனைத் திருத் தொண்டர் புராணத்தானும் அறிக. (1)
கருவா சனைகழிக்குங் காசிநகர் தன்னில்
துருவாச தேவமுனி தொல்லா கமத்தின்
பெருவாய்மை யாற்றன் பெயர்விளங்க வீசன்
ஒருவா விலிங்க வொளியுருவங் கண்டான். |
(இ
- ள்.) கருவாசனை கழிக்கும் - கருப்ப வாசனையைப்
போக்குகின்ற, காசி நகர் தன்னில் - காசிப்பதியில், வேத துருவாசமுனி -
மறைகளை யுணர்ந்த துருவாச முனிவன், தொல் ஆகமத்தின் பெரு
வாய்மையால் - பழைய ஆகமத்தின் சிறந்த உண்மையால், தன் பெயர்
விளங்க - தனது பெயர் விளங்குமாறு, ஈசன் ஒருவா - இறைவன் நீங்காத
ஓளி இலிங்க உருவம் கண்டான் - ஒளிவடிவாகிய சிவலிங்கத் திருவுருவத்தை
நிறுவினான் எ - று.
பொன்றக்
கெடுக்கு மென்பார் வாசனை கழிக்கும் என்றார் ஆகமங்
கூறுமுறைமையா லென்க. வாய்மையாற் கண்டான் என முடிக்க. காணுதல் -
பிரதிட்டித்தல். (2)
(பா
- ம்.) * தொடக்கறுத்த வாறோதி.
|