பக்கம் எண் :

264திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இம்பருல குள்ளவல பண்டினைய பாய்மா
உம்பருல காளிபரி யேகொலது வொன்றே
வெம்பரிதி வெம்பரிகொ லேழவைக ளேழும்
பைம்பரிகள் யாவினைய பாய்கரிக ளென்பார்.

     (இ - ள்.) இனையபாய்மா - இந்தத் தாவுங் குதிரைகள், பண்டு
இம்பர் உலகு உள்ள அல - முன் இந்நில வுலகில் உள்ளன அல்ல; உம்பர்
உலகு ஆளி பரியே கொல் - மேலுலகை ஆளும் இந்திரன் குதிரையோ,
அது ஒன்றே - அது ஒன்றே (ஆதலின் அதுவல்ல); வெம்பரிதி வெம்பரி
கொல் - வெம்மையை யுடைய சூரியனுடைய கடிய குதிரைகளோ, அவைகள்
ஏழ் - அவைகள் ஏழேதான்; ஏழும் பைம்பரிகள் - (அதுவன்றி) அவ்வேழும்
பச்சைக் குதிரைகள் (ஆகலின் அவையுமல்ல; இனைய பாய்பரிகள் யா
என்பார் - (ஆயின்) இத்தாவுங் குதிரைகள் யாவை என (ஒருவரை ஒருவர்)
வினவுவார்.

     இந்திரன் பரி உச்சைச் சிரவம் எனப்படும்; அஃது எண்ணால்
ஒன்றாதலும், சூரியன் பரி எண்ணால் ஏழாதலுடன் பசிய நிறத்தவாயிருத்தலும்
இவற்றொடு வேற்றுமையாம். இச் செய்யுள் ஐயவிலக்கணையின்
பாற்படும். (49)

வெம்பணிக ளைப்பொர வெகுணடெழுவ தேயோ
பைம்புன லுடுத்தமுது பார்முதுகு கீறும்
உம்பருல கைப்பொர வுருத்தெழுவ தேயோ
அம்பர முகட்டள வடிக்குர மழுத்தும்.

     (இ - ள்.) பைம் புனல் உடுத்த - கரியகடலை ஆடையாகவுடுத்த -
முது பார் முதுகு கீறும் - பழைய நில மகளின் முதுகினைக் குளம் பாற்
கிழிக்கும் (ஆகலின்), வெம்பணிகளைப்பொர - கொடிய (அனந்தன் முதலிய
பாதலத்தில் வசிக்கும்) பாம்புகளைப் பொருது அழிப்பதற்கு, வெகுண்டு
எழுவதேயோ - சினந்து எழுவதோ (அன்றி), அம்பரம் முகட்டு அளவு -
வானின் முடிவரையும், அடிக்குரம் அழுத்தும் - அடிக்குளம்பினால்
அழுத்தும் (ஆதலின்), உம்பர் உலகைப்பொர - மேலுலகைப் பொருது
அழித்தற்கு, உருத்து எழுவதேயோ - சினந்து எழுவதோ (அறியோ
மென்றும்).

     கீறும் ஆகலின், அழுத்தும் ஆகலின் எனக் காரணச் சொல் விரிக்க.
(50)

உத்தர திசைப்புரவி தெற்கடையு மாறும்
அத்தகைய தெற்குள வடக்கடையு மாறும்
அத்தகை* குடக்கொடு குணக்கடையு மாறுஞ்
சித்தர்விளை யாடலின் வெளிப்படுதல் செய்யா


     (பா - ம்.) * இத்தகை