பக்கம் எண் :

278திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர்
     சுராதிபன் களிறுசென் னெறிபோய்
இடர்கெட வையை படிந்துதென் கரையி
     லிந்திரேச் சுரனடி பணிவார்.

     (இ - ள்.) குடவயின் - மேற்குத் திசையிலுள்ள, அயிராவதப் பெருந்
தீர்த்தம் குடைந்து - பெருமை பொருந்திய அயிராவத தீர்த்தத்தில் நீராடி,
அயிராவத கணேசக் கடவுளைத் தொழுது - அயிராவத விநாயகக் கடவுளை
வணங்கி, அயிராவ தேச்சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் - அயிராவதேச்சுரப்
பெருமானைத் தொழுதவர்கள், சாபத் தொடர்பினும் - சாபத்
தொடர்ச்சியினின்றும், பாவத் தொடர்பினும் - தீவினைத் தொடர்ச்சியி
னின்றும், கழிவர் - நீங்குவர்; சுராதிபன் களிறு - தேவேந்திரனது
வெள்ளையானையானது, செல் நெறிபோய் - சென்ற வழியிலே சென்று,
இடர்கெட வையை படிந்து - துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி,
தென்கரையில் இந்திரேச்சுரன் அடி பணிவார் - அதன் தென் கரையி
லெழுந்தருளி யிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவர்கள்
எ - று.

     பணிவார் என்பது வரும்பாட்டுட னியையும். (30)

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி
அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்.

     (இ - ள்.) இம்மையில் - இப்பிறவியில், அறம் முன் மூன்றால் எய்திய
பயனை எய்தி - அற முதலிய மூன்றானும் வரும்பயனை நுகர்ந்து,
அம்மையில் - மறுமையில், ஈர் ஏழ மகவான் அரும்பாம் அளவும் - பதி
னான்கு இந்திரர்களின் அரிய காலம் வரையும், வெம்மை இல் போகம் மூழ்கி
- வெப்பமில்லாத (குளிர்ந்த) போகத்தில் திளைத்து, வெறுப்பு வந்து அடைய
-(பின் அதில்) உவர்ப்புத் தோன்ற, உள்ளச்செம்மை யில் விளை -
மனத்தூய்மையில் விளைகின்ற, பேர் இன்பச் சிவகதிச் செல்வர் ஆவார் -
பேரின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வத்தையுடையவராவார் எ - று.

     மூன்று - அறம் பொருள் இன்பம் என்பன. பதினான்கு இந்திரப்
பட்டங்காறும் இம்மை மறுமை யின்பங்களில் உவர்ப்புண்டாக. உள்ளச்
செம்மை - இருவினையொப்பு முதலியன. (31)


     ஆகச் செய்யுள் - 470.